Published : 25 May 2020 09:12 AM
Last Updated : 25 May 2020 09:12 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

ரிஷபம்: சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும்.

மிதுனம்: எதிர்மறை விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

கடகம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். அநாவசிய செலவுகளைத் தவிர்த்து சேமிக்கும் எண்ணம் வரும்.

கன்னி: எதிர்பார்ப்புகள் மளமளவென்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பணவரவு உண்டு.

துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்தித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் இழுபறிக்குப் பின்னர் முடியும். சிலரின் தவறான செயல்களை எண்ணி அவ்வப்போது வருந்துவீர்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

தனுசு: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்: உறவினர், நண்பர்களுடன் நீண்ட நாட்களுக்குப் பின் மனம்விட்டு பேசுவீர்கள். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். திடீர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

கும்பம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். திடீர் யோகம் உண்டு.

மீனம்: கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x