Published : 24 May 2020 11:21 am

Updated : 24 May 2020 11:29 am

 

Published : 24 May 2020 11:21 AM
Last Updated : 24 May 2020 11:29 AM

சித்திரை நட்சத்திரக்காரர்களின் கேரக்டர் இப்படித்தான்!  சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள் என்னென்ன?

27-natchatirangal-a-to-z-41

27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 41;

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.
சித்திரை நட்சத்திரத்தின் தனித்தன்மைகளையும் அந்த நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்களையும் பார்த்து வருகிறோம், இன்னும் பார்ப்போம்.


சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீரத்தில் மட்டுமல்ல விவேகத்திலும் புலி என்று சொன்னேன், நினைவிருக்கிறதுதானே. சித்திரை நட்சத்திரக்காரர்கள் அன்பு காட்டுவதிலும், அரவணைப்பதிலும் சிறந்தவர்கள்.
கூட்டுத்தொழில் தொடர்பு உடையவை எல்லாமே சித்திரை நட்சத்திரம் என சொல்லியிருந்தேன். கூட்டுத்தொழில் மட்டுமல்ல, குழுவாகப் பணியாற்றுவது, கூட்டு முயற்சியில் உருவாகும் காரியங்கள், புதிய நுட்பங்களை சோதனை முயற்சி செய்தல் என அனைத்துமே சித்திரை நட்சத்திர தனித்தன்மை!

திருமணம் செய்ய சுப நட்சத்திரங்கள் பல இருந்தாலும் சித்திரை நட்சத்திரமும் சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கிறது. முகூர்த்தம் குறிக்கும் பலரும் தாலி கட்டும் நேரத்தை மட்டுமே கேட்டுப் பெறுகிறார்கள், ஆனால் சந்ததி வளர மிக முக்கியமானது சாந்தி முகூர்த்தம்தான். சாந்தி முகூர்த்தத்தை நடத்த மிகவும் ஏற்ற நட்சத்திரம்... ஆமாம்... சித்திரை நட்சத்திரம்.

நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதும், நண்பர்களாலேயே முன்னேற்றம் பெறுவதும், பணமாக முதலீடு செய்யாமல் திறமையை முதலீடு செய்து கூட்டாகத் தொழில் செய்வதும் சித்திரையின் தனித்தன்மைகள்; குணாதிசயங்கள். சித்திரை நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்கள்.

அளவான உணவு, அதையும் வேகமாகச் சாப்பிடுதல், அதுவும் மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணுதல் என்பவை சித்திரை நட்சத்திரக்காரர்களின் குணம். ஆரோக்கியத்தில் பாதிப்பு என்று பார்த்தால் ... ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு, ரத்தம் உறையாத பிரச்சினை, முகம் மற்றும் தோலில் கரும்புள்ளிகள் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சினைகள் இருக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை அதாவது கணவன் அல்லது மனைவியாக வரக்கூடிய நட்சத்திரங்கள்... திருவாதிரை - சுவாதி - சதயம் - ரோகிணி - அஸ்தம் - திருவோணம். இவர்கள், மனமொத்த தம்பதிகளாக வாழ்வார்கள். செல்வவளத்துடன் வாழ்வாங்கு வாழ்வார்கள். ( 95 %)

அனுஷம் - உத்திரட்டாதி ;
நல்ல வசதி வாய்ப்புகள், சொகுசான வாழ்க்கை, திருப்திகரமான குடும்பம் என்று வாழ்வார்கள்.


அஸ்வினி- மகம் - மூலம்;
இந்த நட்சத்திரத்தில் வாழ்க்கைத்துணை அமைந்தால் நிரந்தர வேலை, தொழில், நோயற்ற வாழ்வு, கடன் தேவைப்படாத சூழல், சண்டை சச்சரவு இல்லாத வாழ்க்கை என வாழலாம்.

கார்த்திகை - உத்திரம் - உத்திராடம் ;
அவ்வப்போது சண்டை நிகழ்ந்தாலும் கண நேரத்தில் சகல வருத்தங்களையும் மறந்து ஒற்றுமையாக வாழ்வார்கள். சிரம காலத்தில் உதவிகரமாகவும் இருப்பார்கள்.

சித்திரை நட்சத்திரக்காரர்கள் இணையக்கூடாத நட்சத்திரங்கள் -

பூசம், சித்திரை, மிருகசீரிடம், அவிட்டம். இந்த நட்சத்திரங்களுடன் இணைவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இந்தப் பட்டியலில் இடம்பெறாத மற்ற நட்சத்திரங்களை ஜோதிடரின் ஆலோசனை பெற்று இணைத்துக்கொள்ளுங்கள்.


திருவாதிரை - சுவாதி - சதயம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் தடையில்லாத வெற்றிகள் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்ததைவிட அதிகமிருக்கும். எடுக்கும் முயற்சிகள் சிந்தாமல் சிதறாமல் முழுமையாக நன்மைகளை வாரிக்கொடுக்கும். திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக அமைந்தால் உற்ற தோழனாக விளங்குவார்கள். மொத்தத்தில் சித்திரை நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கையை உயரவைக்கும் நட்சத்திரங்கள் இவை!


அனுஷம் - உத்திரட்டாதி ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் ஆதாயம் தருவதாக இருக்கும். சொத்துகள் வாங்கவும் விற்கவும் ஏற்ற நாட்களாக இருக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்கவும் ஏற்றது. சுப விஷயங்கள் செய்யவும், உயர்கல்வி தொடர்பானவை மேற்கொள்ளவும் ஏற்றது. நண்பர்களாக அமைந்தால் வருமான ஆதாயங்கள் உண்டாகும். சுக - துக்கங்களில் தோள் கொடுப்பவராக இருப்பார்கள்.


அஸ்வினி - மகம் - மூலம் ;
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் வேலைக்கு மனு செய்தல், புதிய பணியில் சேருதல், பதவி உயர்வு உள்ளிட்டவை மேற்கொள்ளவும், கடன் வாங்கவும், கடன் அடைக்கவும் ஏற்றவை. கேட்டதும் கேள்வி கேட்காமல் பணம் தரக்கூடிய நண்பர்கள் வேண்டுமா? இந்த நட்சத்திரக்காரர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளுங்கள்.


கார்த்திகை -உத்திரம் - உத்திராடம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றிகரமாக முடியும். அயல்நாடு செல்லுதல், முக்கிய உதவிகள் கேட்டுப்பெறுதல் என அனைத்தும் நன்மை தருவதாக இருக்கும். நண்பர்களாக அமைந்தால் உங்கள் மனமறிந்து தாமாகவே வந்து உதவி செய்வார்கள்.


ரோகிணி - அஸ்தம் - திருவோணம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் எதிர்பார்த்ததை விட அதிக உதவிகளும் நன்மைகளும் கிடைக்கும். அயல்நாடு செல்லுதல், தூரதேசப் பயணங்கள் மேற்கொள்ளுதல், ஆலய தரிசனம் செய்தல், வழிகாட்டும் குருவை சந்தித்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். நண்பர்களாக அமைந்தால் உங்கள் பணத்தைச் செலவழிக்க அனுமதிக்கவே மாட்டார்கள். உங்களிடம் பாகுபாடற்ற, பாசாங்கற்ற அன்பைச் செலுத்துபவர்களாக இருப்பார்கள்.


புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி ;
இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் உங்களுக்கு எதிராக மாறித் தொல்லைகளை தரும். பயணங்கள் செய்யக்கூடாது. எந்த முயற்சி மேற்கொண்டாலும் செயலானது முழுவடிவம் பெறாது. ஏமாற்றமும், விரக்தியும்தான் மிஞ்சும். குறிப்பாக புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திர நாட்களில், கடன் வாங்கவே. கூடாது. இந்த நட்சத்திரக்காரர்கள், நண்பர்களாக அமைவது அவ்வளவு நல்லதல்ல. ஒருவேளை நண்பராக இருந்தால் அவர்களால் துயரங்களை அனுபவிக்க நேரிடும்.

ஆயில்யம் - கேட்டை - ரேவதி ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் செய்யும் செயல்கள் யாவும் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு ஆதாயத்தையும், உங்களுக்கு ஏமாற்றத்தையும் தரும். நண்பர்களாக அமைந்தால் அட்டைப்பூச்சி போல உங்கள் பணம், செல்வாக்கு என அனைத்தையும் உறிந்து எடுத்து விடுவார்கள்.

பரணி - பூரம் - பூராடம் - பூசம் ;
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள் எதுவும் உங்களுக்கு நீங்களே துன்பத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு சமம். ரணவேதனை என்பார்களே ... அப்படியொரு வேதனை இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களிலும், இந்த நட்சத்திர நண்பர்களாலும் ஏற்படும். எனவே இந்த நட்சத்திரக்காரர்களின் நட்பை தவிர்க்க வேண்டும்.

மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் ;
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஆண்கள் திருமணம் செய்யக்கூடாது, ( பெண்களுக்கு பிரச்சினை இல்லை) உபநயனம், மொட்டை போடுதல் முதலானவற்றைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய்க் குளியல், நகம் வெட்டுதல், முடி திருத்துதல், தாம்பத்தியம் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சித்திரை நட்சத்திரத்தின் இறைவன் - துவஷ்டா, இவர் காளியிடம் ஏவல் பணிபுரியும் தேவதை. (சனியின் ஏவலாள் என்றும் குறிப்புகள் உண்டு.) உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார்.

அதிதேவதை - விஷ்வகர்மா ( இவர் பிரம்மதேவரின் மறு உருவம் என்றும் சொல்வார்கள்). திருப்பட்டூர் பிரம்மாவை தரிசிப்பது சிறந்த பலன்களைத் தரும்.

விருட்சம் - வில்வ மரம்

பட்சி - மரங்கொத்தி

மலர் - செண்பகம்

சித்திரை நட்சத்திரக்காரர்களின் நான்கு பாதங்கள், அவர்களுக்கு தனி குணங்கள், ஏற்ற இறக்கங்கள் முதலானவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்!


- வளரும்

தவறவிடாதீர்!


சித்திரை நட்சத்திரக்காரர்களின் கேரக்டர் இப்படித்தான்!  சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள் என்னென்ன?27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 41;‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author