Published : 21 May 2020 12:04 pm

Updated : 21 May 2020 12:04 pm

 

Published : 21 May 2020 12:04 PM
Last Updated : 21 May 2020 12:04 PM

துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்; (மே 21 முதல் 27-ம் தேதி வரை)

vaara-palan

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
இந்த வாரம் ராசிக்கு 9ல் சஞ்சரிக்கும் ராசியாதிபதி சுக்கிரனுடன் ராகு சேர்ந்து இருப்பதால் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள்.
மறைமுக எதிர்ப்புகள் விலகும். பண வரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம்.


மேலதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும்.


பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கலைத்துறையினருக்கு சீரான நிலையே காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.


அரசியல்வாதிகள், கொஞ்சம் பாடுபட்டால்தான் நன்மை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.


உங்களுக்குப் பின்னால் உங்களைப் பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: மாரியம்மனை திங்கட்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை நீங்கும்.
*****************************************


விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)


இந்த வாரம் முன்கோபத்தைத் தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். எதிர்பாராத செலவு உண்டாகும்.


எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.


குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும்.


கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாகப் பேசுவது நல்லது.


தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.
பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சில நற்பலன்கள் வந்தாலும் மனக்கஷ்டமும் அவ்வப்போது உண்டாகும்.
கலைத்துறையினருக்கு கவனம் தேவை. மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசிப் பழகுவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 6, 9
பரிகாரம்: அருகிலிருக்கும் முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட, இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.
********************************************


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)


இந்த வாரம் எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்யத் தயங்க மாட்டீர்கள்.


நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதைத் தடுக்கலாம்.


பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.


வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும்.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.


பெண்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.


மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து வர, குரு அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.
*********************************************

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!


துலாம் விருச்சிகம் தனுசு ; வார ராசிபலன்; (மே 21 முதல் 27-ம் தேதி வரை)- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author