Published : 14 May 2020 12:49 pm

Updated : 14 May 2020 12:49 pm

 

Published : 14 May 2020 12:49 PM
Last Updated : 14 May 2020 12:49 PM

மகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்; மே 14 முதல் 20-ம் தேதி வரை

indha-vaara-palan

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 ம் பாதம் திருவோணம் அவிட்டம் 1,2 பாதம்)

இந்த வாரம் செலவு அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை.
குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை காணலாம்.
அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்பு உணர்ச்சி நீங்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். புதிய வீடு மனை வாங்க தடைகள் ஏற்படலாம்.
உத்தியோகஸ்தர்கள் அதிக வேலைப்பளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள்.
வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும். மூதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள்.
கலைத்துறையினர் சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்த்த புகழ் ,பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். உடல்நலம் சிறப்படையும்.
மாணவமணிகள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெருவெற்றி பெறலாம். அனைத்திலும் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு பித்தம் மயக்கம் போன்ற உபாதைகள் நீங்கும். நெருப்பு தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: கருநீலம், வெண்மை

எண்கள்: 2, 4, 8

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.அனுமன் சாலீசா பாராயணம் செய்யுங்கள்.


-------------------------------------------------------------------------------------------------

கும்பம் (அவிட்டம் 3, 4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
நல்ல பொருளாதார வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும்.
குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும்.
வியாபாரிகள், செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்கு உண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். தொழில் நிமித்தமாக சிலர் தூர தேசப் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.
கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும்.

பெண்கள் எல்லோரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியம். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடக்கு

நிறங்கள்: கரும்பச்சை, மஞ்சள்

எண்கள்: 3, 4, 6

பரிகாரம்: புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோயிலுக்குச் சந்தனம், குங்குமம் கொடுத்து வழிபடவும். பெருமாள் வழிபாடு மிகுந்த பலமும் வளமும் தரும்.


---------------------------------------------------------------------

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இந்த வாரம் உங்களுக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகத்தைத் தருவதுடன் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும் தரும்.
இதுவரை உங்கள் மனதை வாட்டி வந்த சிக்கல்கள் தீரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்கு உண்டான பாதைகளை வகுப்பீர்கள்.
அதே வேளையில் தெய்வ அனுகூலமும் உங்களுக்கு உண்டு. பொருளாதார வளம் சிறப்படையும்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும்.
உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.
புதிய தொழில் தொடங்குவதற்கு உண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.
பெண்களுக்கு சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: மஞ்சள், நீலம்

எண்கள்: 6, 7, 9

பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் அருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்று குரு பகவானை வணங்கி விட்டு வரவும். வீட்டில் விளக்கேற்றி குரு பகவானை வழிபடுவீர்கள். இறையருளும் குருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்.


----------------------------------------------------------------------

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

மகரம்கும்பம்மீனம்; வார ராசிபலன்; மே 14 முதல் 20-ம் தேதி வரைமீனம்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author