Published : 14 May 2020 10:48 am

Updated : 14 May 2020 10:48 am

 

Published : 14 May 2020 10:48 AM
Last Updated : 14 May 2020 10:48 AM

மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்; மே 14 முதல் 20-ம் தேதி வரை

vaara-rasi-palan

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மேஷம் (அசுபதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் லாபஸ்தானத்தில் இருக்கிறார். உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் உண்டாகும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும்.
கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமுகமான நிலை நீடிக்கும். உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும்.
தொழிலில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். பிள்ளைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு வழக்குகளில் நல்ல முடிவுகள் வந்து சேரும்.. வெளிநாட்டிற்கு வேலை, கல்வி தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்சினை தீரும். எதிர்ப்புகள் அகலும்,
அரசியல்வாதிகளுக்கு போட்டிகள் நீங்கும். நோய் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து கூடும்.
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகளும் தீரும். மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடப்பதால் முன்னேற்றம் அடைவார்கள்

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

எண்கள்: 5, 6, 8

பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்றும், ஏனைய கிழமைகளிலும் செவ்வாய் ஹோரையிலும் முருகனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.

------------------------------------------------------------------------------------------

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

இந்த வாரம் ராசியை செவ்வாய் பார்ப்பதால் உங்களுக்கு பூமி மூலமும், வீடு வாகனங்கள் மூலமும் லாபங்கள் இருக்கும்.
எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
விரும்பத்தகாத ஆசைகள் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லா நற்பலன்களும் வந்து சேரும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
அரசியல்வாதிகள் கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து குவியும். பெண்கள் எதிலும் மிகவும் கவனமாக செயல்படவேண்டும்.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தெற்கு

நிறங்கள்: மஞ்சள், நீலம்

எண்கள்: 1, 3, 4

பரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனை வழிபடுவது நல்லது.

--------------------------------------------------------------------

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

இந்த வாரம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும்.
வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும்.
குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். எந்த பிரச்சினையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும்.
வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். அவர்களால் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம்.
உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளைப் பெற முடியாமல் போகலாம்.

கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகள் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும்.
பெண்கள் வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.
மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, நீலம்

எண்கள்: 7, 8, 9

பரிகாரம்: புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கி வரவும்.

---------------------------------------------------------------------------------------------------

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

மேஷம் ரிஷபம் மிதுனம்; வார ராசிபலன்; மே 14 முதல் 20-ம் தேதி வரைபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author