Published : 14 May 2020 08:03 AM
Last Updated : 14 May 2020 08:03 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிரிகளை சாமர்த்தியமாக வீழ்த்துவீர்கள். வழக்குகள் சாதகமாகும். தந்தைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெற்றோரின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்: வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் கனிந்து வரும். வங்கிக் கடன் கிட்டும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

மிதுனம்: பெற்றோரின் உடல்நிலை பாதிக்கக் கூடும். வீண் அலைச்சல் உண்டாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை நீடிக்கும்.

கடகம்: குழப்பங்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்: பங்கு வர்த்தகம் மூலம் லாபம் கிடைக்கும். போட்டி, விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசியல் கட்சி பிரமுகர் நெருக்கமாவார். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள்.

கன்னி: சொத்து வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். வீடு கட்டும் பணி நிறைவடையும். வாகனத்தை மாற்றுவீர்கள். சாதுர்யமாகப் பேசி பல காரியங்களை முடிப்பீர்கள்.

துலாம்: எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குடும்பத்திலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் ஆலோசனைப்படி எல்லோரும் நடப்பார்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டு.

தனுசு: நவரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு கூடி வரும். புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வதற்கு திட்டமிடுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மகரம்: ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. முடிந்துபோன கசப்பான சம்பவங்களைப் பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்காதீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

கும்பம்: தூக்கமின்மை, அநாவசிய செலவுகள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். கணவன் - மனைவி இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும்.

மீனம்: முக்கியப் பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x