Published : 04 May 2020 09:46 AM
Last Updated : 04 May 2020 09:46 AM

ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; (மே 4 முதல் 10 வரை) - இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! 

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
சகோதர சகோதரிகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமுகமாக நிறைவேறும். உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாகம் மிகச்சரியாக கிடைக்கும்.
வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடக்கும். வேலையில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
பெண்கள் தாங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேறுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். மூத்த சகோதரரால் உதவிகள் கிடைக்கும். இளைய சகோதரிக்கு திருமணம் முடிவாகும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக நண்பர்கள் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். பணவரவு எதிர்பார்த்த படியே இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக கிடைக்கும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். திருமணம் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாகும். திருமண தேதி குறிக்கப்பட்டு வாய்ப்பு உள்ளது.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றியைத் தரும். பணம் பையை நிரப்பும். தொழில் வியாபாரத்தில் லாபம் பன்மடங்காக இருக்கும். புத்திர பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். இதுவரை மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்களுக்கு சிகிச்சை இனி தேவைப் படாமல் போகும். குணமாவார்கள்.

புதன் -
அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். குறிப்பாக அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்படுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் புன்னகையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.

வியாழன் -
வீட்டுக் கடன் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும் வழக்குகள் ஏதேனும் இருந்தால் இப்பொழுது நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மனைவியின் உடல்நலத்தில் ஏற்பட்டிருந்த சிறிய பாதிப்பு காணாமல் போகும். குழந்தைகளின் கல்வி தொடர்பான முயற்சிகளுக்கு தேவையான உதவிகளை செய்து தருவீர்கள்.

வெள்ளி -
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஒரு சில உதவிகளை செய்து கொடுப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சனி-
தொல்லை தந்து கொண்டிருந்த கடன் பிரச்சினை ஒன்று, பெரிய மனிதரின் உதவியால் சுமுகமாகத் தீரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்டிருந்த தொய்வு நிலை மாறி சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலுவைத் தொகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ஞாயிறு -
நன்மைகள் அதிகமாக நடக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் தீரும். மருத்துவச் செலவு குறையும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
வேங்கடவனை வணங்கி வாருங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். நன்மைகள் பல மடங்காகப் பெருகும்.
************************************
மிருகசீரிடம் -

அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் வாரம். எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.
குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் குறிப்பாக கணவன் மனைவிக்குள் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் அகலும். பணப்பற்றாக்குறையால் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் அனைத்தும் இந்த வாரம் தீரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி நம்பிக்கைத் தரும்.
வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து விஷயங்கள் பேசி முடிக்கப்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உறுதியாகும்.

இந்த வாரம் -

திங்கள் -
ஒரு சில நல்ல முடிவுகளை எடுத்து அதை செயல்படுத்துவீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபார ரீதியாக ஒரு முக்கியமான மனிதரை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. அவர் மூலம் வியாபாரத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய் -
சுறுசுறுப்பாக பணியாற்றி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள் மனதில் தேவையில்லாத பதட்டம் இருக்கும். ஆனாலும் எந்த வேலைகளையும் தொய்வு இருக்காது. உத்தியோகத்தில் மட்டுமல்லாமல் வியாபார ரீதியாகவும் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். அல்லது சகோதரர்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டிய நிலையும் வரலாம்.

புதன் -
எடுத்துக் கொண்ட அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன் -
அலுவலகப் பணி சுமை கூடும். கடுமையாக உழைத்து வேலைகளை முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒருசில முதலீடுகள் செய்யும் எண்ணம் தோன்றும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

வெள்ளி-
வியாபாரத்தில் லாபம் இருக்கும். தொழிலுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புக் காட்டிய நபர்கள் உங்களிடமே உதவி கேட்டு வருவார்கள். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தரும்.

சனி-
நன்மைகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் மனம் திருப்தியாக இருக்கும்.

ஞாயிறு -
தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். எரிச்சல் ஏற்படுத்தும் சம்பவங்கள் நடக்கும். நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம். குடும்பத்தாருடனும் நண்பர்களிடமும் பொறுமையாக பேசுங்கள். நிதானத்தை இழக்க வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம்-
துர்கை வழிபாடு செய்யுங்கள். ஸ்ரீதுர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். மனதில் நம்பிக்கை பிறக்கும். நன்மைகள் கிடைக்கும்.
**********************************

திருவாதிரை --
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். பிரிவினை தொடர்பாக வழக்குகள் ஏதேனும் இருந்தால் அதை வாபஸ் பெறுவார்கள்.

அலுவலக வேலைகளில் மனத் திருப்தி உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வாரம் பணவரவும், புதிய வாடிக்கையாளர்களும், புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும்.

வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். இந்த வாரத்தில் புதிய பொருட்களை வியாபாரத்திற்காக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சில சிறு தொழில்களை செய்யும் ஆர்வம் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொலைபேசி வழித் தகவல் மனதிற்கு உற்சாகத்தைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். தந்தைவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய் -
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து தீர்வு ஏற்படும். பண வரவு உண்டு. குடும்பத்திற்காக செலவு செய்ய வேண்டியதிருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

புதன் -
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். சமூக வலைதள பயன்பாட்டில் இருந்து விலகியிருங்கள். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கவனமாக பேசுங்கள். கோபத்தை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்டிருந்த ஒரு சில குறைகளையும் இன்று சரி செய்து விடுவீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும்படியாக ஏற்றம் இருக்கும். தரகுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

வெள்ளி -
அதிக நன்மைகள் நடைபெறும்.சுப காரிய பேச்சுக்கள் மனதிற்கு நிறைவைத்தரும். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும். வியாபார விஷயமாக நீங்கள் சந்திக்க நினைத்திருந்த நபரை சந்திப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது.

சனி-
தொழில் தொடர்பான ஒரு சில பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். ஆதாயம் ஏற்படும் ஒரு வியாபார வருவாய் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். இளைய சகோதரர் குடும்பத்திற்கு ஒரு சில உதவிகளை செய்து தர வேண்டியது வரும்.

ஞாயிறு -
அமைதியாக இருக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். அனைவரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
கால பைரவர் வழிபாடு செய்யுங்கள் நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x