Published : 20 Apr 2020 10:39 AM
Last Updated : 20 Apr 2020 10:39 AM

மகம், பூரம், உத்திரம்; (ஏப்ரல் 20 முதல் 26 வரை) - இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! 


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மகம் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகமாக ஏற்படும்.
உத்தியோகத்தில் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.தொழிலில் சீரான முன்னேற்றம் ஏற்படும். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். லாபம் இருமடங்காக கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சொத்து சேர்க்கை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உறுதியாகும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்,ஒப்பந்தங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் தேடிவரும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீரும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும்.

செவ்வாய் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த கமிஷன் தொகை கிடைக்கும். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.

புதன் -
தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். லாபம் இரு மடங்காக இருக்கும்.எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். சகோதர வகை உறவுகளால் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

வியாழன்-
தேவையில்லாத பிரச்சினைகள் தேடி வரும். எதிலும் தலையிட வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் கருத்து கூற வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களைப் பற்றி குறை கூறி பேச வேண்டாம். பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம்.

வெள்ளி-
வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். செய்தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பெண்களுக்கு ஆபரணச் சேர்க்கை ஏற்படும். உங்களுடைய சேமிப்பில் இருந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

சனி-
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார நிமித்தமாக ஏற்படும் சந்திப்புகள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத்தினார் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக பேசி வந்த வியாபாரம் திடீரென இன்று வெற்றிகரமாக முடியும். உங்களுக்கு கிடைக்கவேண்டிய பங்கு தொகை கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகளும், எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும்.சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சக்தி வடிவான அம்மன் ஆலயங்களுக்கு சென்று வாருங்கள். அம்மனுக்கு அபிஷேக ஆராதனை பொருட்களை வாங்கித் தாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நடக்கும்.
********************************

பூரம் -
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும். எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். மூத்த சகோதரர் உங்களுக்கு பெருமளவு உதவி செய்வார். சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி காண்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
பெண்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சில சங்கடங்கள் இன்று சுமுகமாகத் தீரும்.

செவ்வாய் -
அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட ஒரு சில தொய்வு நிலை மாறும். வங்கிக்கடன் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்கும் முயற்சிக்கு குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வரும்.

புதன் -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். மனநிறைவு உண்டாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். ஒப்பந்தங்கள் போடும் வாய்ப்பு உள்ளது.கமிஷன் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்..

வியாழன் -
குடும்பத்தினருக்காகவும் நண்பர்களுக்காகவும் செலவு செய்ய வேண்டியது வரும். அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல் சோர்வு உண்டாகும். சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும். அலுவலகப் பணியில் அதிகப்படியான அழுத்தங்கள் ஏற்படும். வேலையை முடித்துக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

வெள்ளி-
நல்ல தகவல்கள் கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொத்து விற்பனை சம்பந்தமான விஷயங்களும் மனநிறைவைத் தரும்படியாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள்.

சனி-
வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகள் தேடி வரும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை தோன்றும். ஆரோக்கியத்தில் தேவையில்லாத அச்சம் ஏற்படும். செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

ஞாயிறு-
கடந்த சில நாட்களாக தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் பேசி தீர்க்கப்படும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை பாராயணம் செய்யுங்கள், நன்மைகள் அதிகமாகும், பிரச்சினைகள் தீரும்.
****************************************

உத்திரம் -
நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம்.
முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை தோன்றும். அவர்களின் ஆரோக்கியத்திலும் சிறிய அளவில் பாதிப்புகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும்.
பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக முடியும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். மனதளவில் சற்று தளர்வு ஏற்படும். எடுத்துக்கொண்ட வேலைகள் முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஒருவிதமான தேக்க நிலை ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையும்.

செவ்வாய் -
சொத்து விற்பது வாங்குவது போன்றவை நம்பிக்கை தருவதாக இருக்கும். வியாபாரத்தில் ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழிலில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.

புதன்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆதாயம் பெருகும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். ஒப்பந்தங்கள் மனநிறைவைத் தருவதாக இருக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையைப் பார்க்க வேண்டியது வரும். கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படுவதால் அதிகம் உழைக்க வேண்டியது வரும். நண்பரின் வேலைக்காக பரிந்துரை செய்வீர்கள். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

வெள்ளி-
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்பொழுது வசூலாகும். திருமண முயற்சிகள் முடிவாகும். குடும்பத்தில் சுபவிசேஷங்களுக்கான வாய்ப்பு ஏற்படும்.

சனி
அலுவலகத்தில் உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி கேட்டு தொல்லை தருவார்கள். சிறிய அளவிலான கடன் பிரச்சினை ஒன்று தொல்லை தருவதாக இருக்கும்.


ஞாயிறு -
தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் சாதகமாக இருக்கும். சக தொழிலதிபரின் சந்திப்பால் உதவிகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
விநாயகர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x