Published : 13 Apr 2020 04:01 PM
Last Updated : 13 Apr 2020 04:01 PM

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி -  நட்சத்திரப் பலன்கள் (ஏப்ரல் 13 முதல் 19 வரை) - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


பூரட்டாதி -
இனிய தமிழ் புத்தாண்டுவாழ்த்துகள்.
அதிக நன்மைகள் நடைபெறும் வாரம்.நினைத்தது நினைத்தபடியே நடக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகை இந்த வாரம் கிடைக்கும். ஒரு குழுவுக்குத் தலைமை ஏற்கும் வாய்ப்பு உள்ளது.
தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். வியாபாரத்தில் சுறுசுறுப்பு உண்டாகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். லாபம் இருமடங்காக இருக்கும்.
பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான விஷயங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். மாணவர்கள் தங்கள் திறமைகள் வெளிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபாடு காட்டுவார்கள். தமிழ் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
புதிய முயற்சிகள் சாதகமாக இருக்கும். பண உதவிகள் கிடைக்கும். மனதளவில் நம்பிக்கை உண்டாகும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

செவ்வாய்-
மனக்குழப்பம் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் பற்றி கவலை ஏற்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகும். மனக் கவலைகள் நீங்க இறைவழிபாடு, தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.

புதன்-
அலுவலக வேலைகள் சிறப்பாக முடிப்பீர்கள். வியாபார உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தைத் தரும்.

வியாழன்-
வெளியிடங்களுக்கு எங்கும் செல்ல வேண்டாம். தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும். மனதில் சஞ்சலம் உண்டாகும். குடும்பத்தாரிடம் கோபத்தைக் காட்டாமல் அன்பாக இருங்கள்.

வெள்ளி-
சுப விஷயங்கள் பேசி முடிப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வகையில் நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். பணி தொடர்பான சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தார் தேவைகள் பூர்த்தியாகும். பண வரவு எதிர்பார்த்த படியே இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும், பாக்கிகள் வசூலாகும்.

ஞாயிறு-
குடும்பத்தாருடன் நேரத்தை செலவழியுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரணையாக இருங்கள். செலவுகள் அதிகம் ஆனாலும் கவலைப் படாமல் இருக்க வேண்டும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
வடிவேல் முருகனை மனதில் நினைத்து வணங்குங்கள். கந்த சஷ்டி கவசம் படியுங்கள். மன நிம்மதி கிடைக்கும். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.
*************************************

உத்திரட்டாதி -
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம்.
முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
உற்சாகமாக இருப்பீர்கள். கவலைகளை மறந்து பணியில் கவனம் செலுத்துவீர்கள். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
வியாபாரம் வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒரு சில பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும் குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள் பிள்ளைகளுக்காக செலவுகள் ஏற்படும். அது மனநிறைவைத் தருவதாக இருக்கும்.
அவர்களின் கல்விக்காக எடுக்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு சுய தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
பொறுமையாக எதையும் முடிவெடுங்கள். அவசர முடிவுகளை எடுத்து விட்டு பின்னாளில் வருத்தப்பட வேண்டாம். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். செலவுகள் எதிர்பாராத வகையில் இருக்கும்.

செவ்வாய்-
வேண்டிய உதவிகள் கிடைக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும். குழப்ப நிலைகள் மாறும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

புதன்-
பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் ஒரு சில நிர்ப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி சற்று தள்ளி போகும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

வியாழன்-
ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச் செலவுகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய நிலுவைத்தொகை வரும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும்.

வெள்ளி-
பேசும்போது நிதானமாக இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். வெளியில் செல்லும்போது அக்கம்பக்கத்தினருடன் கவனமாக பழகுங்கள். சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள். நண்பர்களிடமும் உறவினரிடமும் பேசும்போது கவனமாக இருக்கவேண்டும். பயணங்கள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் முடிந்தவரை தவிர்த்து விடுங்கள் அல்லது கவனமாக இருங்கள்.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் இன்று கிடைக்கும். சுபவிசேஷங்கள் பற்றிய விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான சலுகைகள் கிடைக்கும். ஒருசிலருக்கு வேலைவாய்ப்பு தொடர்பான விஷயங்கள் உறுதியாகும். வியாபார விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

ஞாயிறு-
எதிர்பாராத பண வரவு ஏற்படும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவீர்கள். பெண்களுக்கு சகோதர வழியிலிருந்து ஒரு சில உதவிகள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரை வணங்குங்கள். ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாருக்கு வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
*****************************************

ரேவதி-
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பெரும் நன்மைகள் நடைபெறும் வாரம் இது.
சேமிப்பு உயரும். பணவரவு தாராளமாக இருக்கும். நினைத்ததை நினைத்தபடியே செய்து காட்டக் கூடிய வாரமாக இருக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கிய பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் பிரச்சினைகள் தீரும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் பேசி தீர்க்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.
தொழிலுக்குத் தேவையான உதவிகள் அரசு வழியில் கிடைக்கும் வாய்ப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் புதிதாக கலை தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த சலசலப்புகள் அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான தகவல் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

செவ்வாய்-
எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும். மன சஞ்சலம் ஏற்படும். பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. எதிலும் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.


புதன்-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். லாபம் இருமடங்காக கிடைக்கும்.

வியாழன்-
மற்றவர்களுக்கு உதவி செய்து மனம் மகிழும் நாள். செலவுகள் ஏற்பட்டாலும் மன நிறைவு உண்டாகும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

வெள்ளி-
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய நிலுவை தொகை வரும். உங்களைப் பற்றி அவதூறுகள் அனைத்தும் முடிவுக்கு வந்து மன நிம்மதி அடையும் நாள். தொழில் தொடர்பாக அரசு உதவி கிடைக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.


சனி-
பொறுமையாக இருந்து காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிட்டு சிக்கிக் கொள்ள வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் கருத்து சொல்லாமல் இருக்க வேண்டும். நண்பர்களோடு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு-
குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிப்பீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி தருவீர்கள். வீட்டு பராமரிப்புகளை நீங்களே முன்னின்று செய்வீர்கள். நண்பர்களிடம் இருந்து சாதகமான நல்ல தகவல் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி பகவானை வணங்குங்கள். ஆரோக்கியம் மேம்படும். தேவைகள் பூர்த்தியாகும். மன நிம்மதி கிடைக்கும்.
***********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x