Published : 13 Apr 2020 01:00 PM
Last Updated : 13 Apr 2020 01:00 PM

விசாகம், அனுஷம், கேட்டை நட்சத்திரப் பலன்கள் (ஏப்ரல் 13 முதல் 19 வரை) - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


விசாகம்-
உங்கள் அனைவருக்கும் சார்வரி தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடக்கும். வேலையில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும், வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். திருமண முயற்சிகள் கைகூடும். சகோதர வழியில் இருந்த வருத்தங்கள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
குடும்பத்தாருடன் இணக்கமாக இருக்க வேண்டும். அலுவலகப் பணிகளில் அலட்சியமாக இருக்க வேண்டாம். எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றியை தரும். முயற்சி எடுக்காத விஷயங்கள் கூட இப்பொழுது தானாக முடியும். நீண்ட நாளாக பேசி வந்த ஒரு பிரச்சினை இன்று பேசி முடிவு எடுக்கப்படும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் முடிவாகும்.

புதன்-
தேவைகள் பூர்த்தியாகும். உதவிகள் தேடிவரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தூரத்து உறவினர் ஒருவரால் நன்மைகள் நடைபெறும்.

வியாழன் -
எதிர்கால சிந்தனை அதிகரிக்கும். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பலவித வாய்ப்புகளை நீங்களாகவே உருவாக்க முயற்சி செய்வீர்கள்.

வெள்ளி -
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஒரு சில உதவிகளை செய்து கொடுப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஒரு சில உதவிகள் கிடைக்கும்.

சனி-
பயணங்கள் செய்ய வேண்டாம். செலவுகள் அதிகமாக இருக்கும். மருத்துவச் செலவு ஏற்படும் வாய்ப்புண்டு. எதிலும் நிதானமாகவும் கவனமாகவும் இருந்தால் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கலாம்.

ஞாயிறு -
நன்மைகள் அதிகமாக நடக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் தீரும். மருத்துவ செலவு குறையும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மனை மனதார நினைத்து வணங்குங்கள். குறைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். நன்மைகள் நடக்கும்.
***********************************

அனுஷம் -
உங்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் வாரம்.
எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. பதவி உயர்வு உள்ளிட்ட சில விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் வளர்ச்சி நம்பிக்கைத் தரும். தேவையான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும் பாகப்பிரிவினைகள் சுமுகமாகும். குழந்தைகளைப் பற்றிய கவலை நீங்கும். பூர்வீகச் சொத்து விஷயங்கள் பேசி முடிக்கப்படும். திரைத்துறை கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
ஒரு சில நல்ல முடிவுகளை எடுத்து அதை செயல்படுத்துவீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். கடன் கேட்டிருந்தால் கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

செவ்வாய் -
நிதானம் அவசியம். பயணங்கள் ஏதும் செய்ய வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். யாரிடமும் எதற்காகவும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

புதன் -
எடுத்துக் கொண்ட அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன் -
அலுவலகப் பணி சுமை கூடும். கடுமையாக உழைத்து வேலைகளை முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒருசில முதலீடுகள் செய்யும் எண்ணம் தோன்றும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

வெள்ளி-
வியாபாரத்தில் லாபம் இருக்கும். தொழிலுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புக் காட்டிய நபர்கள் உங்களிடமே உதவி கேட்டு வருவார்கள். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தரும்.

சனி-
நன்மைகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் மனம் திருப்தியாக இருக்கும்.

ஞாயிறு -
தேவையில்லாமல் பயணங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். எரிச்சல் ஏற்படுத்தும் சம்பவங்கள் நடக்கும். நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம். குடும்பத்தாருடனும் நண்பர்களிடமும் பொறுமையாக பேசுங்கள். நிதானத்தை இழக்க வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சித்தர்கள் ஜீவ சமாதிகளுக்கு சென்று வாருங்கள். மனதில் நம்பிக்கை பிறக்கும். நன்மைகள் கிடைக்கும்.
********************************************

கேட்டை -
சார்வரி தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இந்த வாரம் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
உத்தியோகத்தில் மனத் திருப்தி உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். இந்த வாரத்தில் புதிய பொருட்களை வியாபாரத்திற்காக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சில சிறு தொழில்களை செய்யும் ஆர்வம் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
நிதானத்தை இழக்காமல் இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தை பொறுமையாக கையாளவும். பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். தேவையில்லாத பிரச்சினைகளை நீங்களாகவே வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

செவ்வாய் -
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து தீர்வு ஏற்படும். பண வரவு உண்டு. குடும்பத்திற்காக அத்தியாவசிய செலவு செய்ய வேண்டியதிருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

புதன் -
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். சமூக வலைதள பயன்பாட்டில் இருந்து விலகியிருங்கள். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கவனமாகப் பேசுங்கள். கோபத்தை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்போது திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சிகள் முடிவாகும்.

வெள்ளி -
அதிக நன்மைகள் நடைபெறும்.சுப காரிய பேச்சுக்கள் மனதிற்கு நிறைவைத்தரும். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும்.

சனி-
தொழில் தொடர்பான ஒரு சில பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். ஆதாயம் ஏற்படும் ஒரு வியாபார வருவாய் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும் வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும் குடும்பத்தார் மீதான அக்கறை கூடும்.

ஞாயிறு -
நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு ஒரு உதவி செய்து கொடுப்பீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
லலிதா சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
**************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x