Published : 10 Apr 2020 02:20 PM
Last Updated : 10 Apr 2020 02:20 PM

சார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் ; அஸ்தம் நட்சத்திரப் பலன்கள்!

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


அஸ்தம்:


கிரகமாற்றம்:


08-07-2020 அன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் உங்களின் ஒன்பதாம் நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் உங்களின் இருபதாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு கேது பகவான் உங்களின் ஆறாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் உங்களின் ஒன்பதாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
27-12-2020 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் உங்களின் ஒன்பதாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
05-04-2021 அன்று இரவு 1.09 மணிக்கு குரு பகவான் அதிசாரம் பெற்று பதினொன்றாம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

எல்லோரிடமும் அனுசரித்துப் பேசும் குணமுடைய அஸ்த நட்சத்திர அன்பர்களே.


இந்த புத்தாண்டில் பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின்போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும்.
தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.


குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.


பெண்களுக்கு எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
அரசியல்வாதிகளுக்கு வரவு நன்றாக இருக்கும்.


கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.


மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

+: பணவரத்து நன்றாக இருக்கும்


-: வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை

பரிகாரம்: வாராஹி தேவியை வணங்கிவர செல்வம் சேரும். மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப பிரச்சினை தீரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x