Published : 06 Apr 2020 12:21 PM
Last Updated : 06 Apr 2020 12:21 PM

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!   (ஏப்ரல் 6 முதல் 12 வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


பூரட்டாதி
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும் வாரம். ஆதாயம் தரக்கூடிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கின்றன.
தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள்.
பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
செலவுகள் அதிகமாக இருக்கும். வீண் அலைச்சல்கள் ஏற்படும்.தேவை இல்லாமல் மற்றவர் மீது கோபத்தைக் காட்ட வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் எரிச்சல் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும்.

செவ்வாய்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் விலகும். மன நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.


புதன் -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். யாரிடமாவது கடன் கேட்டு இருந்தாலும் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் தீரும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய சலுகைகள் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சகோதரர்களும் நண்பர்களும் உதவி செய்ய முன்வருவார்கள்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு ஆரோக்கிய அச்சுறுத்தல்களும் ஆரோக்கியத்தில் முன்னேற்றமும் ஏற்படும். சொத்து தொடர்பான விஷயங்கள் நல்ல முடிவு கிடைக்கும்.

வெள்ளி -
உற்சாகமான நாளாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபராத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

சனி-
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சோம்பல் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களில் மனதைச் செலுத்தி குழப்பிக் கொள்வீர்கள். பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு -
பெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய தகவல் கிடைக்கும். அது மனநிறைவைத் தருவதாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ காளிகாம்பாள் அன்னையை வணங்கி வாருங்கள், நன்மைகள் அதிகரிக்கும்.
**********************************************

உத்திரட்டாதி-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறை இருப்பவர்களுக்கு சீரான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும்.
பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். சகோதரர்களுக்கு திருமணம் உறுதி செய்யப்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும்.பிள்ளைகளின் திறமைகளைக் கண்டு ஆச்சரியம் ஏற்படும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர முயற்சிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

செவ்வாய்-
எதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உதவிகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் கணிசமாக குறையும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வியாழன் -
எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். அலுவலக வேலைகளில் எடுத்துக் கொண்ட திட்டத்தை முடித்து சமர்ப்பிப்பீர்கள். அடுத்த புராஜக்ட் இன்று பொறுப்பேற்று செய்யத் தொடங்குவீர்கள். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். குழந்தைகளிடம் கடுமை காட்ட வேண்டாம். பொறுமை நிதானம் மிக அவசியம், உணர்ச்சிவசப்பட்டு எந்தச் செயலையும் செய்ய வேண்டாம்.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வீடு விற்பது வாங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
பசுக்கள் உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களுக்கு உணவளியுங்கள். நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*************************************

ரேவதி -
திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிக்கும் வாரம்.
அலுவலகப் பணியில் சகஜ நிலையேயை நீடிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும்.
பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளில் கருத்துக் கூற வேண்டாம். அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டும். அக்கம்பக்கத்தினருடன் வீண் சச்சரவுகள் தவிர்க்க வேண்டும்.

செவ்வாய்-
சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும் அதற்கு அரசின் உதவிகளும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

புதன்-
எந்த விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தினருடன் ஒத்துழைத்து செல்லுங்கள். குழந்தைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் தேவையற்ற வாக்குவாதங்களை செய்ய வேண்டாம். பயணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். கொடுத்த பணிகளை சிறப்பாக செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி-
அத்தியாவசிய பயணங்கள் தவிர மற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது.வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.

சனி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். நெருங்கிய உறவினர்களிடம் ஒரு சில உதவிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவு இன்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகள் இன்று சுமுகமான முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானையும் முருகப்பெருமானையும் வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x