Published : 01 Apr 2020 08:37 am

Updated : 01 Apr 2020 08:41 am

 

Published : 01 Apr 2020 08:37 AM
Last Updated : 01 Apr 2020 08:41 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

indha-naal-ungalukku-eppadi

மேஷம்
உங்கள் மரியாதை, அந்தஸ்து உயரும். வருங்கால வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். எக்காரியத்திலும் பொறுமை அவசியம்.


ரிஷபம்
இழுபறியாக இருந்த விஷயத்தில் புதிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும்.



மிதுனம்
விமர்சனங்கள், அவதூறுகளை பொருட்படுத்தாமல், உங்கள் கடமையை செய்யுங்கள். உதவி செய்வதாக வாக்கு கொடுத்த சிலர் இழுத்தடிப்பார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.


கடகம்
சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்கவேண்டி வரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் தேவை.


சிம்மம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீண், ஆடம்பர செலவுகளை குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பணவரவு உண்டு.


கன்னி
நீண்டகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.


துலாம்
பழைய பிரச்சினைகளுக்கு உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் சுமுகத் தீர்வு காண்பீர்கள். பழுதாகி இருந்த வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பல வகையிலும் பொருட்கள் சேரும்.


விருச்சிகம்
புதிய முயற்சிகள் சற்று தள்ளிப்போய் முடியும். சிலரது தவறான செயல்களை நினைத்து வருந்துவீர்கள். உடல்நலத்தில் கவனம் அவசியம். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.


தனுசு
கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்கள் பேச்சில் நம்பிக்கையும், செயலில் சுறுசுறுப்பும் கூடும்.


மகரம்
உறவினர், நண்பர்களை தொடர்புகொண்டு, மனம்விட்டு பேசுவீர்கள். அரசு, வங்கி வகையில் ஆதாயம் உண்டு. மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். ஆன்மிகம், யோகா, தியானத்தில் ஈடுபாடு ஏற்படும்.


கும்பம்
உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். எக்காரியத்திலும் நிதானம் அவசியம்.


மீனம்
கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். தாய் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்த்த சேதி வரும்.


*********

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

ராசிபலன்இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author