Published : 26 Mar 2020 09:22 am

Updated : 26 Mar 2020 09:22 am

 

Published : 26 Mar 2020 09:22 AM
Last Updated : 26 Mar 2020 09:22 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

indha-naal-ungalukku-eppadi

மேஷம்: கடந்தகால சம்பவங்களை அவ்வப்போது நினைத்துப் பார்ப்பீர்கள். ஆன்மிகம், யோகா, தியானத்தில் கவனம் செலுத்துவீர்கள். பொருள் வரவு உண்டு.


ரிஷபம்:கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபத்துக்கு இடம்தராமல் மனம்விட்டுப் பேசுங்கள். சகோதர வகையில் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். பேச்சில் பொறுமை தேவை.

மிதுனம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப் பார்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். எக்காரியத்திலும் நிதானம் அவசியம்.

கடகம்: சவாலான காரியத்தை செய்து முடித்து வெளி வட்டாரத்தில் பாராட்டு பெறுவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் இயன்றதை செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

சிம்மம்: எடுத்த காரியங்களை முடிக்க முடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும். தந்தை உடல்நிலை சீராகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.

கன்னி: மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அவமானங்கள், இடையூறுகளை பொருட் படுத்தாமல் கடமையை செய்யுங்கள்.

துலாம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் தொடர்புகொண்டு பேசுவார்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகள் உடல்நிலை சீராக இருக்கும். சகோதர வகையில் உதவி கிடைக்கும். எடுத்த காரியங்கள், புது முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. பேச்சில் பொறுமை தேவை.

தனுசு: துணிச்சலாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மகரம்: விருந்தினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் உங்கள் நிலையை அறிந்து தக்க சமயத்தில் உதவுவார்கள். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உற்சாகம் கூடும்.

கும்பம்: உங்களைத் தேடி வந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளி மாநிலம், வெளிநாடுகள் வகையில் நல்ல சேதி கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல மாற்றம் தெரியும்.

மீனம்: குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் ஓய்ந்து நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். பணவரவு உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


வரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!



இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்ராசிபலன்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author