Published : 23 Mar 2020 09:31 AM
Last Updated : 23 Mar 2020 09:31 AM

மூலம், பூராடம், உத்திராடம்; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!  - வார நட்சத்திர பலன்கள்- - (மார்ச் 23 முதல் 29 வரை)  - 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மூலம், பூராடம், உத்திராடம்; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - வார நட்சத்திர பலன்கள்- - (மார்ச் 23 முதல் 29 வரை)
- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மூலம்-
நெருக்கடிகள் மெல்ல மெல்ல விலக ஆரம்பிக்கும். இதுவரை இருந்த குழப்ப நிலைகள் படிப்படியாக தீரும்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இதுவரை வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி சாதகமாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வீடு மனை தொடர்பான சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும். புதிய வீடு வாங்கும் முயற்சி சுமுகமாக முடியும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
இன்று எந்த விஷயத்தையும் பொறுமையாகக் கையாள வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். நிதானமான செயல்பாடுகள் உங்களுக்கு நல்ல வழியைக் காட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்களும் பிரச்சினைகளை உண்டுபண்ணும். குடும்பத்தினருடன் இணக்கமாக இருங்கள்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். சொத்து சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன்-
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த உதவி இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.

வியாழன்-
கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அடகு வைத்த நகைகளை மீட்க வழி கிடைக்கும். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும். பத்திரப் பதிவு உள்ளிட்ட விஷயங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி-
தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் போடுவதில் அதிக கவனம் வேண்டும், முடிந்தால் ஒப்பந்தங்கள் போடுவதை தள்ளி வையுங்கள். வியாபாரத்தில் கடன் தொடர்பான சங்கடங்கள் உருவாகும். அலுவலகத்தில் நெருக்கடிகள் ஏற்படும்.

சனி-
முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வங்கிக்கடன் தொடர்பான முயற்சியில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக சந்திக்க நினைத்துக் கொண்டிருந்த ஒரு நபரை இன்று சந்திப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். கடைகள் வணிக நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய கிளைகளை தொடங்கும் சிந்தனை உருவாகும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
**************************************************

பூராடம் -
மனக் குழப்பங்கள் தீரும் வாரம். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும்.
சரியாக சிந்திக்கக் கூட முடியாமல் இருந்த நிலை மாறும். இப்பொழுது தெளிவான சிந்தனைகள் தோன்றும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான உதவிகள் கிடைக்கும்.
வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இந்த வாரம் தீரும். கலைஞர்களுக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் தீரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உறுதியாகும்.

செவ்வாய்-
வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் அதற்காக உங்கள் கோபத்தை வெளிக்காட்டாமல் இருப்பது நல்லது நண்பர்களுடனும் குடும்பத்தாருடனும் எனக்காக இருந்தால் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம் சமூகவலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.

புதன்-
வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். நீண்ட நாள் கடன் பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சுப காரிய பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த புதிய வியாபாரம் தொடர்பான தகவல் கிடைக்கும். கணவன்/மனைவி உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வெள்ளி-
எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் எதிர்பார்த்தபடியே நடக்கும் பணவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடிவடையும்.

சனி-
தேவையற்ற பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சித்தி புத்தி விநாயகர் வழிபாடு செய்யுங்கள் விநாயகருக்கு சிதறுதேங்காய் நேர்த்திக்கடன் செலுத்துங்கள். நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். வருமானம் பெருகும்.
**********************************************************************

உத்திராடம்-
நன்மைகள் அதிகமாக நடக்கும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.வருமானம் இருமடங்காக ஏற்படும்.

எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி முழு வெற்றியைத் தரும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

பெண்களுக்கு தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுயதொழில் தொடர்பான விஷயங்களில் ஆதரவு கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் மற்றும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களால் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியை கொடுக்க கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.

புதன்-
அலுவலக வேலையாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் ஏற்படும். வியாபார வளர்ச்சியும் லாபமும் அமோகமாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தை சுபமாக முடியும்.

வியாழன்-
நல்ல சம்பவங்கள் அதிகமாக ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தைத் தரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

வெள்ளி-

குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

சனி-
தொழில் தொடர்பாக எதிர்பார்த்திருந்த முதலீடுகள் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலக வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

ஞாயிறு-
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். வாகன பழுது சரி செய்வீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்வீர்கள் அல்லது புதிதாக மாற்றி வாங்குவீர்கள். செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவருக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள். தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும்.

**************************************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x