Published : 16 Mar 2020 12:12 pm

Updated : 16 Mar 2020 12:12 pm

 

Published : 16 Mar 2020 12:12 PM
Last Updated : 16 Mar 2020 12:12 PM

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!  நட்சத்திரப் பலன்கள், (மார்ச் 16 முதல் 22 வரை)  - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

indha-vaaram-ippadithan

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!
நட்சத்திரப் பலன்கள், (மார்ச் 16 முதல் 22 வரை)
- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

பூரட்டாதி -
நிதானமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.
அலுவலக வேலையில் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு சொத்து சேர்க்கை உள்ளிட்ட நல்ல விஷயங்கள் நடக்கும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும், ஆனாலும் கவனமாக ஒப்பந்தங்களை படித்துப் பார்த்து ஏற்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி பெறுவார்கள்.


இந்த வாரம் -

திங்கள்-
அலுவலகத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் வரும். தொழில் செய்யும் இடத்திலும் அதிக கவனம் வேண்டும். வியாபாரிகள் வியாபாரத்தில் கணக்கு வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும். கைப்பொருளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஒரு சில குழப்பமான மனநிலையில் இருந்தாலும் தெளிவாக முடிவுகளை எடுப்பீர்கள்.

புதன்-
எண்ணங்கள் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நன்மைகள் நடக்கும். பெண்களுக்கு சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன்-
ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். கடன் தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.

வெள்ளி-
அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். உயரதிகாரிகளின் கோபம் தணியும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நடைபெறும். எதிர்பார்த்த தொழில் முதலீடு கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

சனி-
மற்றவர்களுக்கு உதவி வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அலுவலக வேலையை வீட்டிலேயும் வைத்து செய்ய வேண்டிய நிலை வரும். தொழில் தொடர்பான சந்திப்புகளில் இழுபறி நீடிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் மேலும் தள்ளிப்போகும்.

ஞாயிறு-
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்தித்து ஆதாயங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ வாராஹி அம்மனை வணங்குங்கள். ஸ்ரீ வாராஹி மூல மந்திரத்தை உச்சாடனம் செய்யுங்கள். மனக்குழப்பம் தீரும். நல்லது நடக்கும்.
*********************************************


உத்திரட்டாதி -
நன்மைகள் நடக்கும் வாரம். ஆனாலும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
வரவும் செலவும் சமமாகவே இருக்கும். எனவே சிக்கனம் அவசியம் தேவை. பணியிடத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வரும். ஆனாலும் உங்களுடைய திறமையால் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும்.
அயல்நாட்டு ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. புதிய நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றவும் வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு. கலைஞர்களுக்கு அயல்நாடு செல்லும் யோகம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
பொறுமையை கடைபிடிக்க வேண்டும். நிதானத்தை இழக்கக்கூடாது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகத்தின் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம். வியாபார சந்திப்புகள், தொழில் ரீதியான சந்திப்புகள் என எது இருந்தாலும் அதை தள்ளி வைக்கவேண்டும்.

செவ்வாய்-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். பணவரவு சரளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

புதன்-
குழப்பமான மனநிலை தோன்றும். ஆனாலும், எச்சரிக்கை உணர்வு இருப்பதால் கடைசி நேரத்தில் தெளிவாக முடிவெடுப்பீர்கள். எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். செலவுகளை கண்டு அச்சம் ஏற்படும். மாலை நேரத்தில் மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடக்கும்.

வியாழன்-
எடுத்துக்கொண்ட அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய விசேஷ பேச்சுவார்த்தைகள் நடைபெறும். சுப விசேஷங்கள் முடிவெடுக்கப்படும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.

வெள்ளி-
தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடவேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சனி-
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக இருக்கும். கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். வங்கியில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். கவலை தந்து கொண்டிருந்த தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

ஞாயிறு-
ஆலய வழிபாடு செய்ய முற்படுவீர்கள். மகான்கள் தரிசனம் ஏற்படும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் சாதகமான பதில் கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மகாவிஷ்ணு பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். செலவுகள் குறையும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
**************************************************

ரேவதி -
எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நீங்கள் விரும்பிய வண்ணமே நிறைவேறும்.பணவரவு தாராளமாக இருக்கும்.
ஒரு சில விஷயங்களில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் அதன் பாதிப்பு தெரியாது. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். லாபம் கிடைக்கும்.
வியாபாரிகள் புதிய கிளைகளை ஆரம்பித்தல், வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவது போன்ற செயல்களில் இறங்கி வெற்றி காண்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
திருமண முயற்சிகள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
செயல்களில் நிதானம் தேவை. பொறுமையாக இருந்து காரியங்களைச் சாதிக்க வேண்டும். வெற்றியின் விளிம்பு வரை சென்று தடுமாற்றம் ஏற்படலாம். கவனமாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். பண வரவு தாமதமாகும்.

செவ்வாய்-
பணவரவு சரளமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன்-
தாமதப்பட்டு கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான விஷயங்கள் நடக்கும். பெண்களுக்கு முக்கியமான கடன் பிரச்சினை ஒன்று தீர்வதற்கு வழி கிடைக்கும்.

வியாழன்-
வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அதற்கான முயற்சிகளில் இன்று இறங்குவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வாகன மாற்றச் சிந்தனை ஏற்படும். மனதில் கடந்த சில நாட்களாக இருந்த குழப்பங்கள் இன்று முடிவுக்கு வரும்.

வெள்ளி-
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சனி-
நண்பர்களோடு இணைந்து பயணங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். வீண் விரயங்கள் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் வேண்டும்.

ஞாயிறு-
சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் பற்றிய நல்ல தகவல் இன்று உறுதியாகும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
சிவலிங்கத் திருமேனிக்கு வில்வார்ச்சனை செய்து வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். பிரச்சினைகள் தீரும்.
*************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!


பூரட்டாதிஉத்திரட்டாதிரேவதி - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!  நட்சத்திரப் பலன்கள்(மார்ச் 16 முதல் 22 வரை)  - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author