Published : 16 Mar 2020 10:50 AM
Last Updated : 16 Mar 2020 10:50 AM

 மூலம், பூராடம், உத்திராடம் - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!  நட்சத்திரப் பலன்கள், (மார்ச் 16 முதல் 22 வரை)  - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம், பூராடம், உத்திராடம் - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!
நட்சத்திரப் பலன்கள், (மார்ச் 16 முதல் 22 வரை)


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் தீவிரம் காட்டி செயல்படவேண்டும்.
சோம்பலுக்கு இடம் கொடுக்கக்கூடாது. கடுமையாகப் போராடினால் வெற்றி நிச்சயம். உத்தியோகத்தில் அழுத்தங்கள் அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். ஆனாலும் கவலைப்படாமல் இருங்கள் விரைவில் இந்த நிலைமை மாறும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி காண்பார்கள். புதிய வியாபார கிளைகளை தொடங்குவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு விரும்பிய கல்வி கிடைக்கும். பெண்கள் தங்கள் குடும்பத்தாருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த வாரம் -

திங்கள்-
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக செயல்பட்டு ஒப்பந்தங்கள் போடுவீர்கள். ஒரு சில விஷயங்களில் முடிவுகளை எடுப்பதற்கு முன் தீவிரமாக ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம், வளர்ச்சி உண்டாகும் வியாபாரம் அமோகமாக இருக்கும். லாபம் பெருகும்.

புதன்-
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம் அலுவலகத்திலும் பணி செய்யும் இடத்திலும் கவனமாக இருக்க வேண்டும், சற்று கூடுதல் கவனத்தோடு எச்சரிக்கை உணர்வுடன் இருந்தால் இந்த நாளை எளிதாக கடக்கலாம்.


வியாழன்-
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வியாபார பேச்சுவார்த்தைகள் லாபகரமாக இருக்கும்.

வெள்ளி-
குலதெய்வ வழிபாடு செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை ஏற்படும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். குழந்தைகளின் கல்விக்காக மாற்று ஏற்பாடுகளை செய்வீர்கள்.

சனி -
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒரு உதவி கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். வியாபார பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஹனுமன் வழிபாடு அதிக நன்மைகளை ஏற்படுத்தித் தரும்.அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள்.எதிர்ப்புகள் காணாமல் போகும் நன்மைகள் அதிகமாகும்.
*****************************************************

பூராடம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். அரசின் உதவிகள் கிடைக்கும். பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். திரைத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பணவரவு இருமடங்காக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

புதன் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். எதையோ இழந்தது போல் தவிப்பீர்கள். வழிபாடு மன அமைதி தரும்.

வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். நன்மைகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

வெள்ளி -
வீண் செலவுகள் ஏற்படும்.பராமரிப்பு செலவுகள் கூடுதலாகும். அலுவலகத்தில் சக ஊழியருக்கு உதவி செய்வீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

சனி-
கடன் தொடர்பான பிரச்சனை சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.

ஞாயிறு -
நண்பர்களுடன் பயணங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளை கருத்து கூறாமல் இருப்பது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம்-
சக்தி வடிவான அம்மன் ஆலயத்துக்குச் சென்று வாருங்கள். அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
***************************************************

உத்திராடம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான கௌரவம் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
பங்கு வர்த்தகத்தில் லாபம் இரு மடங்காக இருக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படும். பெண்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமண முயற்சிகள் கைகூடும்.
தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.

செவ்வாய் -
வேலை இல்லாதவர்களுக்கு இப்பொழுது வேலைக்கான அழைப்பு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக வெளிநாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

புதன் -
எதிர்பாராத பண வரவு உண்டாகும்.தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும் முக்கியமான பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சிறிய கடன்களை ஒருசிலவற்றை அடைப்பீர்கள். இல்லத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.

வியாழன் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும் தொழில் தொடர்பாக, அல்லது வியாபாரத்திற்காக வங்கிக் கடன் கிடைக்கும்.

வெள்ளி -
உங்கள் பணிகளை மட்டும் என்று கவனித்து வாருங்கள். பணி செய்யும் இடத்தில் மற்றவர்களுக்கு உதவ சென்றால் மொத்த வேலையும் உங்களிடமே சுமத்துவார்கள். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள்.

சனி-
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் பாதிப்பை தராத வகையில் இருக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். சிறு தூரப் பயணம் மேற்கொண்டு அதில் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். லாபம் தரும் ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீவிநாயக பெருமானுக்கு அர்ச்சனை செய்து அருகம்புல் மாலை சூட்டி வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
****************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x