Published : 15 Mar 2020 01:36 PM
Last Updated : 15 Mar 2020 01:36 PM

இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - நட்சத்திரப் பலன்கள் -   (மார்ச் 16 முதல் 22 வரை) - ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - நட்சத்திரப் பலன்கள் -
(மார்ச் 16 முதல் 22 வரை) - ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை,
- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -
நன்மைகள் பலவாறாக நடக்கும்.
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் இந்த நெருக்கடிகள் தீரும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும்.
தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். இதுவரை வேலையில்லாத பெண்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தினருடன் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். ஒரு குழுவுக்குத் தலைமை ஏற்கும் நிலை வரலாம்.அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைகள் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும்.

செவ்வாய்-
அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகள் வரும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் உடல் நலிவுற்றது போல் இருக்கும். சோம்பல் அதிகரிக்கும். வேலைகளில் ஆர்வமில்லாதது போல் இருக்கும்.அர்த்தமற்ற கோபம், டென்ஷன் ஏற்படும்.

புதன்-
வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பதற்கு இன்று அதற்கான சாதகமான பதில் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பெண்களுக்கு சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது, புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கி கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். பெண்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும்.உறவுகளால் உதவிகள் கிடைக்கும்.

வெள்ளி-
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் கிடைக்கும். வீடு வாங்குவது, விற்பது போன்ற விஷயங்கள் இன்று நல்ல முடிவிற்கு வரும்.

சனி-
பராமரிப்பு செலவுகள் கூடும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். இட மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள்.

ஞாயிறு-
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவருக்கு செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள், நன்மைகள் பெருகும்.
*****************************************************************

மிருகசீரிடம் -
எதிர்பார்ப்புகள் படிப்படியாக நிறைவேறும் வாரம்.
தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். ஒருசிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். தாயாரின் உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். தந்தை வழி உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். சுய தொழில் தொடர்பாக கணவர் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர் பகை மாறும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம்-

திங்கள்-
மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றும். உடல் நலத்தில் சிறிய அளவிலான பாதிப்புகள் இருக்கும் , அது தொடர்பான மருத்துவ செலவுகளும் ஏற்படும். வேளையில் ஒருவித மந்த நிலை இருக்கும். ஆர்வம் குறையும். முடிந்தவரை இயல்பாக இருக்க வேண்டும்.

செவ்வாய்-
புதிய முயற்சிகளில் ஈடுபட சிந்தனை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும், ஒப்பந்தங்களும் திருப்திகரமாக இருக்கும்.

புதன்-
எதிலும் அவசரப்படக்கூடாது. நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். பணச்செலவு தாறுமாறாக இருக்கும். செலவுகளை கட்டுக்குள் வைக்கவேண்டும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல் தோன்றி மறையும். தேவையில்லாத வாக்குவாதங்கள் விவாதங்கள் எதிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும். பிரச்சனைகள் எதிர் வரும், அதைத் தவிர்க்க என்ன வழியோ அதை செய்ய வேண்டும்.

வியாழன்-
தேவையான செலவுகள்ஏற்படும். வியாபார பயணங்கள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்த படி இருக்கும். சொத்து வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சனி-
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். இந்த நாளாக எதிர்பார்த்திருந்த விஷயங்கள் இன்று நல்ல முடிவிற்கு வரும். பணவரவும் நினைத்தபடியே கிடைக்கும்.

ஞாயிறு-
செலவுகள் ஏற்படும், நண்பர்களால் சங்கடங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவ செலவு உண்டு. பயணங்களை தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி குரு பகவானை வணங்குங்கள். நன்மைகள் நடக்கும்.தேவைகள் பூர்த்தியாகும்.
************************************************

திருவாதிரை-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
முக்கியமான விஷயங்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.
அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருங்கள். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.ஒரு சில போட்டிகளை சந்திக்க வேண்டி வரும். கடன் பிரச்சினைகள் நெருக்கடி தரும். ஆனாலும் தேவையான உதவிகள் கிடைத்து அனைத்து பிரச்சினைகளையும் சமாளித்து விடுவீர்கள். பெண்களுக்கு வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நம்பிக்கை பிறக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையை பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவை தரும். இல்லத்திற்கு உறவினர்கள் வருகை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய்-
கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பெரிய அளவிலான பண உதவி கிடைக்கும்.

புதன்-
தேவையான உதவிகள் அனைத்தும் தானாக தேடிவரும். பணவரவு.தாராளமாக இருக்கும். நண்பர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும்.குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

வியாழன்-
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கவனமாக இருக்கவேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மற்றவர்கள் உங்களை கோபப்படுத்தி பார்ப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் கவனமாக இருங்கள்.

வெள்ளி-
வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். நெடுநாளாக சந்திக்க நினைத்திருந்த நபரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

ஞாயிறு-
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி ஆகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்ப்புகள் விலகி போகும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். வேலைக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மகாசக்தி மாரியம்மனை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். எதிர்ப்புகள் அகலும். நினைத்தது நிறைவேறும்.
*********************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x