இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Published on

மேஷம்: இழுபறியாக இருந்துவந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கி வரும் வாய்ப்பு உண்டு.

ரிஷபம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். மகளின் திருமண விஷயம் கைகூடி வரும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது திட்டமிட்டபடி முடியும்.

மிதுனம்: கடந்த காலத்தில் நடந்த இனிமையான நிகழ்வுகளில் அவ்வப்போது மூழ்குவீர்கள். தாயாருடன் எதிர்பாராது கருத்து மோதல் வரும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.

கடகம்: பிரச்சினைகளை தீர்க்க வழிபிறக்கும். வேற்றுமொழி பேசுபவரின் அறிமுகம் நன்மை பயக்கும். புதிய நண்பர்களால் உங்களின் பிரச்சினைகள் பாதியாகக் குறையக் கூடும்.

சிம்மம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

கன்னி: மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். காய், கனிகள், கீரையை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

துலாம்: தவிர்க்க முடியாத செலவுகளால் மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழல் உருவாகும். சகோதரர் வகையில் அன்புத் தொல்லை அதிகமாகும். அரசு காரியங்கள் இழுபறியாகும்.

விருச்சிகம்: எதிர்பாராத வகையில் பணம் வரும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். மனைவி ஆதரவாகப் பேசுவார். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.

தனுசு: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர் வீட்டு திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் போன்ற சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். ஆன்மிக பயணம் ஏற்படலாம்.

கும்பம்: இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுங்கள்.

மீனம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in