Published : 09 Mar 2020 03:11 PM
Last Updated : 09 Mar 2020 03:11 PM

இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! நட்சத்திர பலன்கள் (மார்ச் 9 முதல் 15 வரை) விசாகம், அனுஷம், கேட்டை ;  - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! நட்சத்திர பலன்கள்

(மார்ச் 9 முதல் 15 வரை) விசாகம், அனுஷம், கேட்டை

விசாகம் -

முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் வாரம்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இடமாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு இந்த வாரம் அதற்கான தகவல் கிடைக்கும்.தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரம் வளர்ச்சி அமோகமாக இருக்கும்.
வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வீடு மனை தொடர்பான சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும். புதிய வீடு வாங்கும் முயற்சி சுமுகமாக முடியும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
சுபச் செலவுகள் அதிகமாக ஏற்படும். சொத்து தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வருமானத்திற்கு குறை இருக்காது. பெண்கள் தாங்கள் எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரிகளுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகள் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். சொத்து சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன்-
அலைச்சல்களும், அதனால் உடல் உபாதைகளும் ஏற்படும். சிறிய அளவிலான மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. மற்றவர்கள் நலனுக்காக நீங்கள் அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும்.

வியாழன்-
கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அடகு வைத்த நகைகளை மீட்க வழி கிடைக்கும். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

வெள்ளி-
தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் போடுவதில் அதிக கவனம் வேண்டும். முடிந்தால் ஒப்பந்தங்கள் போடுவதை தள்ளி வையுங்கள். வியாபாரத்தில் கடன் தொடர்பான சங்கடங்கள் உருவாகும்.

சனி-
மனதை வருத்திக் கொண்டிருந்தது முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும்.எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக சந்திக்க நினைத்துக் கொண்டிருந்த நபரை இன்று சந்திப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். கடைகள் வணிக நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய கிளைகளைத் தொடங்கும் சிந்தனை உருவாகும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
சக்தி வடிவான அம்மன் ஆலயங்களுக்கு சென்று வாருங்கள். அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும், செலவுகள் குறையும்.
*********************************************************

அனுஷம் -
பண வரவுகளால் மன நிறைவு உண்டாகும்.
புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பணவரவு மட்டுமல்லாமல் புதிய தொழில் ஒப்பந்தங்களும் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும்.
வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இந்த வாரம் அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். நீண்ட நாட்களாக வசூலாகாத பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்க முயற்சி சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது ஏற்படும். செலவுகள் எதிர்பாராத அளவிற்கு இருக்கும். அலுவலகம் மற்றும் பணிபுரியும் இடங்களில் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம்.

புதன்-
செலவுகளும் செலவுகளுக்கேற்ற வருமானமும் உண்டாகும். நீண்டநாள் மனதை வருத்திக் கொண்டு இருந்த பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். ஆலயவழிபாடு ஏற்படும். நண்பர்களுடனான தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடிவடையும். ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

சனி-
தேவையற்ற பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
நவக்கிரக வழிபாடு செய்யுங்கள். கோளறு பதிகம் படித்து வாருங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தடைகள் அகலும்.
********************************************************************

கேட்டை-
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும் வாரம் இது.
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி முழு வெற்றியைத் தரும்.
இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெண்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுயதொழில் தொடர்பான விஷயங்களில் ஆதரவு கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.
பழைய நகைகளை விற்று புதிய நகைகளாக மாற்றுவீர்கள். கலைஞர்களுக்கு ஒரு சில வாய்ப்புகள் தள்ளிப்போகும். விடா முயற்சியால் சாதிக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் மற்றும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
வேலைக்காக இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேறு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் கிடைக்கப் பெறலாம். தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியை கொடுக்க கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.

புதன்-
அலுவலக வேலையாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தை தொடர்பாக இரு வீட்டார் சந்திப்பு ஏற்படும்.

வியாழன்-
நல்ல விஷயங்கள் அதிகமாக ஏற்படும் நாள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தைத் தரும். மொத்தத்தில் மகிழ்ச்சிகரமான நாள்.

வெள்ளி-
குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும் தொழில் தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆரம்பிப்பீர்கள்.வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

சனி-
சகோதரர்களுடன் மனம்விட்டுப் பேசி முக்கியமான பிரச்சினைகளில் தீர்வு காண்பீர்கள். அலுவலக வேலைகளில் இருந்த சுணக்கமான நிலை மாறி, எளிதாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

ஞாயிறு-
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். வாகனப் பழுது சரி செய்வீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்வீர்கள் அல்லது புதிதாக மாற்றி வாங்குவீர்கள். செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சிவாலய வழிபாடும்,சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கு வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை கலந்து நிவேதனம் செய்யுங்கள், அதை பிரசாதமாக அனைவருக்கும் தாருங்கள்.நன்மைகள் அதிக அளவில் ஏற்படும். நினைத்தது நிறைவேறும்.
************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x