இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Published on

மேஷம்: வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். தாய்வழி உறவுகளால் மனக்கசப்புகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.

ரிஷபம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். தோல்வி பயம் நீங்கும். சகோதரி உதவுவார். பழைய கடனை பைசல் செய்வீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: முன்கோபம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். யாருக்கும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ கொடுக்க வேண்டாம்.

சிம்மம்: நெருங்கிய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சிறுசிறு தடைகள், தாமதங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் மளமளவென்று நிறைவேறும். உங்களுடைய பலம், பலவீனங்களை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள்.

துலாம்: பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தை ஊர் மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். குடும்பத்தில் கூச்சல், குழப்பம் நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். கலைப்பொருட்கள் சேரும்.

தனுசு: வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்தி மீறி எந்தவித உறுதிமொழியோ, உத்தரவாதமோ யாருக்கும் தர வேண்டாம். எதிர்பாராத கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள்.

மகரம்: சமயோசித புத்தியால் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். எதார்த்தமாகவும், சாமர்த்தியமாகவும் பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

கும்பம்: பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கிவர வாய்ப்பிருக்கிறது. கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: முன்கோபம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்திருந்த நபர் உங்களைத் தேடி வருவார்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in