இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன் யோன்யம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை உயரும். தந்தை உடல்நலம் சீராகும்.

ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேச வேண்டாம். எல்லாவற்றிலும் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. ஆன்மிக நாட்டம் கூடும்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் வீண் விவாதம் வந்துபோகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.

கடகம்: பணப் பற்றாக்குறை நீங்கும். விரும்பிய பொருட்கள், ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: நீண்ட நாளாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். கொடுக் கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். பேச்சில் பொறுமை தேவை.

கன்னி: குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர் கள். சாதுர்யமான பேச்சால், தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். வாகனச் செலவுகள் நீங்கும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.

துலாம்: வேலைகளை உடனுக்குடன் முடிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். பணப் பற்றாக்குறை இருந்தாலும், பிறரிடம் கைமாற்று வாங்கி சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்: எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். பணவரவு உண்டு.

தனுசு: குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சகோதரர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனம் சீராகும். பயணத்தால் ஆதாயம், லாபம் உண்டு.

மகரம்: வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். குடும்பத் தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வெளியூர் பயணத்தால் செலவு, அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு.

கும்பம்: உற்சாகம், தோற்றப் பொலிவுடன் காணப்படுவீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிவீர்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.

மீனம்: அனைவரும் ரசிக்கும் வகையில் வெளிப்படையாக பேசுவீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in