Published : 01 Mar 2020 04:37 PM
Last Updated : 01 Mar 2020 04:37 PM

இந்த வாரம் இப்படித்தான்! வார  நட்சத்திர பலன்கள் - (மார்ச் 2 முதல் 8ம் தேதி வரை) பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


இந்த வாரம் இப்படித்தான்! வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 2 முதல் 8ம் தேதி வரை) பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

பூரட்டாதி -
நினைத்தது நிறைவேறும். எண்ணங்கள் பூர்த்தியாகும்.


பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.ஆதாயம் பெருகும். அயல்நாட்டில் இருந்து முதலீடுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.


வியாபாரிகளுக்கு அதிக அளவிலான வியாபாரங்கள் ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எந்த ஒரு விஷயத்திலும் நிதானம் வேண்டும்.அவசர முடிவுகள் எடுக்க வேண்டும் யாரிடம் பேசினாலும் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் செய்ய வேண்டாம்.

செவ்வாய் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளும் வெற்றியாகும். குடும்பத்தினருடன் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று வருவீர்கள்.

புதன் -
நீங்கள் மனதில் நினைத்த அனைத்து விஷயங்களும் இன்று செயல்வடிவம் பெறும். வியாபார விஷயங்கள் ஆதாயத்துடன் நிறைவேறும். அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் சீராக இருக்கும். தொழில் முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். எதிர்காலம் கருதி, சில முக்கியமான முடிவுகளை குடும்பத்தாருடன் ஆலோசித்து எடுப்பீர்கள்.

வெள்ளி -
எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக முடியும். எதிர்பாராத ஒப்பந்தங்கள் வியாபாரத்தில் ஏற்படும்.
சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாகும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.

சனி-
செலவுகள் கட்டுக்கடங்காமல் ஏற்படும். பயணங்களை தவிர்த்துவிடுவது நல்லது. வியாபார பேச்சுவார்த்தைகளை தள்ளி வையுங்கள். குடும்பத்தாருடன் தேவையில்லாத சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.

ஞாயிறு -
ஆதாயம் தரும் வியாபாரம் ஒன்று பேசி முடிப்பீர்கள். லாபம் இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். சுபவிசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் மனநிறைவைத் தரும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
நவக்கிரக வழிபாடு செய்யுங்கள். கோளறு பதிகம் படியுங்கள், நன்மைகள் அதிகமாகும், தடைகள் அகலும், எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.

************************************************************
உத்திரட்டாதி-
முயற்சிகளில் முன்னேற்றம் காணும் வாரம்.


எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு வேலைக்கு மாறும் முயற்சி வெற்றியாகும்.


வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். சொந்தமாக தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும். எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.


அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் அகலும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டு மன மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் உயர் கல்விக்காக வேறு பள்ளி, அல்லது கல்லூரிகளுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் வளர்ச்சி அமோகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

செவ்வாய் -
நன்மைகள் நடைபெறும் நாள். எதிர் பார்த்த பணம் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

புதன் -
உத்தியோகம் தொடர்பாக வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்தால் அந்த முயற்சியும் சாதகமாக இருக்கும். இல்லத்தில் சுபகாரிய விசேஷங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.

வியாழன் -
வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும், அதில் ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். நீண்ட நாளாக முடிக்க முடியாமல் இருந்த அலுவலக வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.

வெள்ளி -
உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.மற்றவர்கள் விஷயங்களில் கருத்துக்கள் தெரிவிக்க வேண்டாம். எதையும் அமைதியாக கடந்து செல்லுங்கள்.

சனி-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். ஒரு முக்கியமான பிரச்சனை முடிவுக்கு வரும்.

ஞாயிறு -
பொறுமையும் நிதானமும் அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். யாரிடமும் எதற்காகவும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட வேண்டாம்.

வணங்கவேண்டிய தெய்வம் -
திருமலை திருப்பதி சீனிவாச பெருமாளை வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். எதிர்ப்புகள் அகலும். தேவைகள் பூர்த்தியாகும்.
**********************************************************

ரேவதி-


எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.


உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி முழு வெற்றியை தரும். வெளிநாடு சென்று வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த வாரம் அதற்கான நல்ல தகவல் கிடைக்கும்.


பெண்களுக்கு - குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், புதிய பாடங்களை கற்றுக் கொள்ளுதல் அல்லது புதிய மொழி கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டு அதற்கான பயிற்சி வகுப்புகளில் சேர்வார்கள்.


சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமாக மாறும். தாயாரின் ஆரோக்கியத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்துங்கள்.


கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும், பெரிய நிறுவனங்களில் ஒப்பந்தம் செய்யப்படுவீர்கள். இசைத்துறை மற்றும் நாட்டிய கலைஞர்கள் அயல்நாடு சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலைகளைச் செய்ய வேண்டியது வரும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான பயணங்கள் ஏற்படும். வியாபாரம் பேச்சுவார்த்தைகள் நீண்டு கொண்டே போகும்.

செவ்வாய் -
வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் தரும் வியாபாரம் ஒன்று எளிதாக முடியும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று கிடைக்கும்.

புதன்-
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். ஒப்பந்தங்களில் எதிலும் கையெழுத்திட வேண்டாம். காசோலைகளை கொடுக்கும் பொழுது ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து கொடுங்கள். வீண் பிரச்சினைகளில் சிக்க வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்களை மிகவும் வலியுறுத்தி பேச வேண்டாம்.

வியாழன்-
தாமதப்பட்டு கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் இன்று எளிதாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். திருமண ஏற்பாடுகள் தீவிரமாகும். வியாபார விஷயமாக பயணம் ஏற்படும்.

வெள்ளி -
வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன்/மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

சனி-
வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். பழுதடைந்த மின்சாதன பொருட்களை சரி செய்து தருவீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கும்.

ஞாயிறு -
குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவம் நடக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் முழுமையடையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடிவடையும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் இன்று ஆரம்பமாகும்.

வணங்கவேண்டியதெய்வம்-
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணரை வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள் அல்லது கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x