Published : 01 Mar 2020 04:07 PM
Last Updated : 01 Mar 2020 04:07 PM

இந்த வாரம் இப்படித்தான்! வார  நட்சத்திர பலன்கள் - (மார்ச் 2 முதல் 8ம் தேதி வரை) திருவோணம், அவிட்டம், சதயம் - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


இந்த வாரம் இப்படித்தான்! வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 2 முதல் 8ம் தேதி வரை) திருவோணம், அவிட்டம், சதயம்

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

திருவோணம்-
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் வாரம்.


தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை தேடும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.


பதவி உயர்வு எதிர்பார்த்த கொண்டிருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு தேவையான முதலீடுகள் கிடைக்கும்.


இதுவரை வேலை இல்லாமல் இருந்த பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கையும் ஏற்படும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். அசையாச் சொத்து வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும். சொத்துக்கள் விற்பது வாங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஏற்படும்.

செவ்வாய்-
வீண் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. சிக்கனமாக இருப்பது மிக முக்கியம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

புதன்-
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்டநாள் வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.

வியாழன்-
வெளிநாடுகளில் வேலை தேடும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் ஏற்படும். ஏற்றுமதி தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும் கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி-
எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வரவேண்டிய கடன்கள் வசூலாகும் குடும்பத்தினரின் எதிர்காலத்திற்காக சேமிப்புகள், முதலீடுகள் போன்றவற்றை செய்வீர்கள். வியாபார விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். நன்மைகள் அதிகமாக நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும்.

சனி-
எதிர்பாராத அளவிற்கு நன்மைகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஆதாயம் பலமடங்காக இருக்கும்.

ஞாயிறு-
குடும்பத்தினருடன் நேரத்தை செலவழியுங்கள். நண்பர்களுடன் வெளியில் செல்வதை தவிர்த்து விடவேண்டும். பயணங்கள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏதும் இருந்தால் அதையும் ஒத்தி வையுங்கள்.

வணங்கவேண்டிய தெய்வம்-
சித்தர் பெருமக்கள் வழிபாடு அதிக நன்மைகளை ஏற்படுத்தித் தரும்.தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நிறைவேறும்.
**************************************************************

அவிட்டம்-


அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் வாரம்.


தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் பூர்த்தியாகும். உதவிகள் கிடைக்கும். அதிக நன்மைகள் ஏற்படும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


சகோதர வகையில் இருந்த வருத்தங்கள் மாறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி சீராக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.


கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அலட்சியமாக இருக்க வேண்டாம்.

இந்த வாரம் -

திங்கள்-
நிதானமாகச் செயல்படவேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். ஒவ்வொரு பிரச்சினையிலும் அதன் ஆழத்தை அறிந்து அதன் பிறகு செயல்படுங்கள். குடும்பத்தினருடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம்.

செவ்வாய்-
நன்மைகள் அதிகமாக நடைபெறும். தேவைகள் பூர்த்தி ஆகும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய கிளைகளை தொடங்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

புதன்-
வீண் அலைச்சல்களை தவிர்த்துவிடுங்கள். வங்கி தொடர்பான பிரச்சினைகளை, வங்கி அதிகாரிகளுடன் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். வியாபார பேச்சுவார்த்தைகளில் அதிக கவனத்துடன் பேச வேண்டும்.

வியாழன்-
வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இன்று வேலைக்கான நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். அசையாச் சொத்து வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு. வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில் வளர்ச்சி மனநிறைவு தருவதாக இருக்கும்.

வெள்ளி-
கடன் தொடர்பான முக்கிய பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றியுண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

சனி-
தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும், லாபமும் உண்டாகும். சுப விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பயணங்கள் ஏற்படும்.

ஞாயிறு-
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். மகாலட்சுமி தாயாரை வழிபடுவது நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
************************************************

சதயம் -
சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம்.


தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மனநிறைவு உண்டாகும். குடும்பத்தில் சுப விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி அடைவார்கள்.


தொழிலில் நல்ல முன்னேற்றம் வளர்ச்சி உண்டாகும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உள்ளது. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு உண்டாகும்.


பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. சொத்து சேர்க்கையும் ஏற்படும். மூத்த சகோதரர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஒருசிலர் பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். பெண்கள் அடகு நகையை மீட்க உதவி கிடைக்கும் சேமிப்பிலிருந்து தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவார்கள்.

செவ்வாய்-
உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு ஆதாயம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலை செய்ய வேண்டியது வரும். அலைச்சல் அதிகமாக இருக்கும். அனாவசியப் பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

புதன்-
பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். வியாபார பேச்சு வார்த்தை சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். நல்ல பலன்கள் நடைபெறும் நாள்.

வியாழன்-
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் உங்களை கோபப்படுத்தி பார்ப்பார்கள், அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்துவிடுங்கள். அமைதியாக இருக்க வேண்டும்.

வெள்ளி-
அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.

சனி-
சுபச்செலவுகள் ஏற்படும். பணவரவில் தடை ஏதும் இருக்காது. வியாபாரத்தில் ஆதாயம் இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

ஞாயிறு-
நல்ல பலன்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளால் ஆதாயம் கிடைக்கும். பெரிய மனிதரின் நட்பு கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்குங்கள். வீட்டில் மீனாட்சி அம்மன் படத்தை வைத்து வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும். அம்மன் வழிபாடு பலம் சேர்க்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x