Published : 01 Mar 2020 02:45 PM
Last Updated : 01 Mar 2020 02:45 PM

இந்த வாரம் இப்படித்தான்! வார  நட்சத்திர பலன்கள் - (மார்ச் 2 முதல் 8ம் தேதி வரை) விசாகம், அனுஷம், கேட்டை- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

இந்த வாரம் இப்படித்தான்! வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 2 முதல் 8ம் தேதி வரை) விசாகம், அனுஷம், கேட்டை- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


விசாகம் -


அதிக நன்மைகள் ஏற்படும் வாரம் .


பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஒருசிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவதற்கு தேவையான முதலீடுகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியாகும்.


வியாபாரிகள் வியாபாரத்தில் அபரிமிதமான லாபத்தை காண்பார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். எதிர்பாராத சொத்து சேர்க்கையும் உண்டாகும்.


மாணவர்கள் கல்வியில் அபரிமிதமான வளர்ச்சி காண்பார்கள். உயர் கல்விக்காக எடுத்த முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்பட வேண்டும். கடினமான முடிவுகளை எடுக்க வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாரிடமும் எதற்காகவும் கோபப்பட வேண்டாம்.

செவ்வாய் -
வியாபார ஒப்பந்தங்கள் முடிவடையும். இடம் பூமி சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை சாதகமாக இருக்கும். தொலைபேசி வழித் தகவலால் மனம் மகிழ்ச்சியடையும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

புதன் -
எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைத் தரும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். முதலீடுகளில் முதலீடு செய்ய ஆர்வம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடியும்.

வியாழன் -
அதிக நன்மைகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய கிளைகள் துவக்கும் எண்ணம் ஏற்படும். தொழில் தொடர்பான முன்னேற்றமான தகவல் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

வெள்ளி-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். உறவினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.இதுதொடர்பாக எதிர்பாராத பெருமளவு நன்மைகள் நடைபெறும்.

சனி-
அந்த ஒரு விஷயத்திலும் பொறுமையாக கையாள வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். வாகன பழுது உள்ளிட்டவை ஏற்படும், அதற்காக செலவு செய்ய வேண்டியது வரும்.

ஞாயிறு -
சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். வியாபார விஷயங்களில் இன்று வெற்றிகரமாக முடியும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
****************************************************

அனுஷம் -


சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம்.


அலுவலகத்தில் இயல்பான நிலையே நீடிக்கும். எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் கிடைக்கும்.


திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். புதிய கிளைகளை ஆரம்பிக்கும் எண்ணமும் ஏற்படும்.


மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்விக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். அயல்நாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
மனதை வருத்திக் கொண்டிருந்த கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். வங்கியில் மேலும் ஒரு புதிய கடனுக்கு விண்ணப்பம் செய்வீர்கள்.
நீண்ட நாளாக முடியாமல் இருந்த வேலை இன்று சுலபமாக முடியும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியான எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும்.

செவ்வாய்-
அலுவலகத்திலும் வேலை செய்யும் இடத்திலும் நிதானமாக இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களிடம் கோபத்தை வெளிப்படுத்த கூடாது. பயணங்கள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். ஒப்பந்தங்கள் போடுவதற்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்யுங்கள்.

புதன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த வங்கிக் கடன் பற்றி நல்ல தகவல் கிடைக்கும்.

வியாழன் -
தொழில்முறை பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.

வெள்ளி -
சுபகாரிய விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டாகும்.

சனி-
செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவைகளுக்காக அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டியது வரும்.தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும்.

ஞாயிறு -
வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான முக்கிய நபர்களை சந்தித்து ஆதாயம் பெறுவீர்கள் சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்கள் முன்னேற்றமாக இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
தட்சிணாமூர்த்தி குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக் கடலை நிவேதனம் செய்யுங்கள். நன்மைகள் கூடும் தேவைகள் பூர்த்தியாகும்.
*******************************************************

கேட்டை -
எதிர்பாராத நன்மைகள் நடக்கும் வாரம்.


தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தன வரவு தாராளமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். சொத்து விற்பனை சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.


உத்தியோகத்தில் இயல்பான நிலை நீடிக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான அத்தனை உதவிகளும் கிடைக்கும். பெண்கள் தங்கள் உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். ஒற்றுமை பலப்படும்.திருமண முயற்சிகள் கைகூடும். புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

ஆண் வாரிசுக்காக ஏங்கியவர்களுக்கு இப்பொழுது ஆண் வாரிசு கிடைக்கும்.


மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பது மட்டுமல்லாமல் புதிய கிளைகளை தொடங்கவும் முற்படுவார்கள். கலைஞர்களுக்கு எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். அபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். வணிகர்கள் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும்.

செவ்வாய் -
சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து ஒப்பந்தங்களாக மாறும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு அடகு வைத்த பொருட்களை மீட்கும் வாய்ப்பு உண்டாகும்.

புதன் -
அதிக நன்மைகள் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவது தொடர்பான முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.

வியாழன் -
வெளிநாடு செல்லும் முயற்சி சாதகமாக இருக்கும். அயல்நாடுகளில் பணிபுரிபவர்களுக்கு பணி நீட்டிப்பு கிடைக்கும்.ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வெள்ளி -
எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தினரோடு நேரத்தை செலவிடுவீர்கள்.

சனி-
பணவரவு தாராளமாக இருக்கும். லாபகரமான ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

ஞாயிறு _
எந்த புதிய முயற்சிகளிலும் இறங்க வேண்டாம். பேச்சுவார்த்தையில் எதிலும் ஈடுபட வேண்டாம். உங்கள் கருத்துக்களை மற்றவர்களிடம் திணிக்க முயற்சிக்காதீர்கள். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரகத்தில் இருக்கும் சூரியபகவானுக்கு மலர் மாலை சூட்டி வணங்குங்கள். மன நிறைவு உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் பெருகும்.
***************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x