Published : 01 Mar 2020 14:19 pm

Updated : 01 Mar 2020 14:19 pm

 

Published : 01 Mar 2020 02:19 PM
Last Updated : 01 Mar 2020 02:19 PM

இந்த வாரம் இப்படித்தான்! வார  நட்சத்திர பலன்கள் - (மார்ச் 2 முதல் 8ம் தேதி வரை) அஸ்தம், சித்திரை, சுவாதி - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

indha-vaaram-ippadithan

இந்த வாரம் இப்படித்தான்! வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 2 முதல் 8ம் தேதி வரை) அஸ்தம், சித்திரை, சுவாதி

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்தம் -


நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.


உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாரமாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அபாரமான வளர்ச்சியைக் காண்பார்கள்.


பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் இருமடங்காக இருக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.நகை தொடர்பான கடன் பிரச்சினைகள் தீரும். மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.


தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். அயல்நாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். வாகனங்களை ஓட்டும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வீண் செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும்.

செவ்வாய் -
எதிர்பாராத நன்மைகள் நடக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
வங்கியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபார விஷயங்கள் சுமுகமாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

புதன் -
எதிர்பார்த்த அனைத்தும் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களின் கல்வியில் அக்கறை ஏற்படும்.

வியாழன் -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட நாளாக முடிக்காமல் இருந்த வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக முக்கிய நபர்களின் சந்திப்பு ஏற்படும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

வெள்ளி -
அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும் நாள். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியை தரும். வியாபாரமும் விஷயங்கள் ஒப்பந்தங்களாக மாறும். குடும்பத்தில் சுபவிஷேச பேச்சுவார்த்தைகள் நடக்கும்.பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

சனி-
பொறுமையும் நிதானமும் அவசியம். அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது. சக ஊழியர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் என அனைவரிடமும் கவனமாகப் பேச வேண்டும். அலட்சியமாகப் பேசி அவதிக்குள்ளாக வேண்டாம்.

ஞாயிறு -
எதிர்பாராத அளவுக்கு நன்மைகள் நடைபெறும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சௌந்தர்ய லஹரி பாராயணம் செய்யுங்கள் அல்லது கேட்டு வாருங்கள். நன்மைகள் அதிகமாகும், எதிர்ப்புகள் விலகும், நினைத்தது நிறைவேறும்.
***********************************************************

சித்திரை -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.


உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்கள். கட்டுமான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.


பெண்களுக்கு மனம் மகிழும்படியாக வேலை திருமணம் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குழந்தையில்லாத பெண்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகமும் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
கடன் தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாக தீரும். தேவையான பண உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

செவ்வாய் -
பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். அலட்சியமாக எந்த செயலையும் செய்ய வேண்டாம். சக ஊழியர்கள், சக நண்பர்களுடன் விவாதம் செய்ய வேண்டாம்.

புதன் -
நன்மைகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாடுகளில் வேலை தேடும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாளாகவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும்.

வியாழன் -
அதிக நன்மைகள் நடக்கும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரங்களில் லாபம் இருமடங்காக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கையாள திட்டம் தீட்டுவீர்கள். தொழில் தொடர்பான முக்கிய நபர்களுடன் ஆலோசனை செய்வீர்கள். வாகனம் மற்றும் சிந்தனை உருவாகும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

சனி-
எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வருமானம் இருமடங்காக இருக்கும். வியாபார வளர்ச்சி அபாரமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் முன்னேற்றத்தை தரும்.எதிர்பார்த்துக் கொண்டிருந்த முக்கிய தகவல் இன்று கிடைக்கும்.

ஞாயிறு -
வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று திரும்ப கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும், தேவைகள் பூர்த்தியாகும்.
*********************************************************************

சுவாதி -
நினைத்தது நிறைவேறும் வாரம்.


உங்கள் எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான உதவிகள் தானாக தேடி வரும்.


பெண்களுக்கு இயல்பான சொத்து சேர்க்கை ஏற்படும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். சகோதரர்கள் உதவி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த நன்மைகளும் எதிர்பாராத நன்மைகளும் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

செவ்வாய் -
அனைத்து முயற்சிகளும் இன்று எளிதாக முடியும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.தொழில் தொடர்பாக புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படும்.

புதன்-
மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். நன்மைகள் அதிகமாக நடைபெறும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும் அலுவலகத்தில் சக ஊழியர்களில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர் வருகை ஏற்படும்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் நல்ல தகவல் கிடைக்கும். நீண்டநாளாக முடியாமல் இருந்த வேலையை இன்று எளிதாக செய்து முடிப்பீர்கள்.

வெள்ளி -
தொலைதூரப் பயணங்கள் ஏதும் இருந்தால் தவிர்த்துவிடுங்கள். முக்கியமான பேச்சுவார்த்தைகளை தள்ளி வையுங்கள். எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். நிதானமாக இருப்பது மனதிற்கும் உடலுக்கும் நல்லது.

சனி-
வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் சாதகமான தகவல் கிடைக்கும்.புதிய முயற்சிகளை எடுத்து அதில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ஞாயிறு -
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் மன நிறைவைத் தரும்.எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடியும் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும் கடன் பிரச்சனைகள் தீர்வதற்கு வழி கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
சக்தி வடிவான அம்மன் ஆலயங்களுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
******************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

இந்த வாரம் இப்படித்தான்! வார  நட்சத்திர பலன்கள் - (மார்ச் 2 முதல் 8ம் தேதி வரை) அஸ்தம்சித்திரைசுவாதி - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author