Published : 01 Mar 2020 01:28 PM
Last Updated : 01 Mar 2020 01:28 PM

இந்த வாரம் இப்படித்தான்! வார  நட்சத்திர பலன்கள் - (மார்ச் 2 முதல் 8ம் தேதி வரை) மகம், பூரம், உத்திரம் - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

இந்த வாரம் இப்படித்தான்! வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 2 முதல் 8ம் தேதி வரை) மகம், பூரம், உத்திரம் - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மகம் -


செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதற்கேற்ற வருமானம் இருந்து கொண்டே இருக்கும்.


அதிக நன்மைகள் நடக்கும் வாரம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.


ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் இருமடங்காக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். புதிய வியாபாரக் கிளைகளை தொடங்குவார்கள்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் வாய்ப்பு உருவாகும். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் தேவையான உதவிகள் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். சாதாரண வேலையில் இருப்பவர்களுக்கு, இப்பொழுது சிறந்த நிறுவனத்திலிருந்து வேலை கிடைப்பதற்கான அழைப்பு வரும் வாய்ப்பு உள்ளது. பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.

செவ்வாய் -
ஆடம்பர செலவுகள் அதிகமாக ஏற்படும். வீட்டு பராமரிப்பு செலவுகள் உண்டு.வாகன மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். இன்று நீங்கள் எந்த வேலை செய்தாலும் அது மற்றவர்களுக்கு ஆதாயமாக இருக்கும். உங்களுக்கு நற்பெயர் மட்டுமே மிஞ்சும்.

புதன் -
நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் லாபகரமாக இருக்கும்.

வியாழன் -
எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையாக பாருங்கள், எதிர்மறையாக சிந்தித்தால் மேலும் பிரச்சினைகள் அதிகமாகும். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

வெள்ளி -
தொழில் நிமித்தமாகவோ அல்லது வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும், பயணங்களால் ஆதாயம் ஏற்படும். சொந்த வீடு வாங்குவது தொடர்பான வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும்.

சனி-
வீடு மாற்றும் சிந்தனை அல்லது வாகன மாற்றம் சிந்தனை உருவாகும். குறைந்தபட்சம் வீடுகளில் மராமத்து பணிகள், புதுப்பித்தல் போன்ற பணிகள் செய்யும் எண்ணம் தோன்றும். எதிர்காலம் பற்றிய மனக்கவலை தோன்றி மறையும். நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தாருடனும் நேரத்தை செலவிடுவீர்கள்.

ஞாயிறு -
எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தை முடிவடைந்து லாபம் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். நண்பர்களுக்கு வலிய சென்று உதவி செய்வீர்கள்.

வணங்கவேண்டிய தெய்வம் -
யோக நரசிம்மர் வழிபாடு அதிக நன்மைகளை ஏற்படுத்தித் தரும். எதிர்ப்புகள் அகலும். மன அமைதி உண்டாகும்.
*******************************************************

பூரம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சேமிப்பு உயரும்.


கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாக இருக்கும்.


தொழிலில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உற்பத்தியான பொருட்கள் விறுவிறுப்பாக விற்பனையாகும். பங்கு வர்த்தகத் துறையில் எதிர்பாராத அளவுக்கு லாபம் அதிகரிக்கும்.


பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து சுப விசேஷ விஷயங்களில் முனைப்பு காட்டுவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். உயர்கல்வி மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எந்தவொரு விஷயத்திலும் பொறுமையாக இருக்கவேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். தொலைதூரப் பயணங்களை தவிர்த்து விடுங்கள். கையாளும் பொருட்களில் கவனம் அதிகமாக இருக்க வேண்டும்.

செவ்வாய் -
பணவரவு இருமடங்காக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தமாக விற்பது அல்லது வாங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும்.

புதன் -
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.நீண்டநாளாக உறுத்திக் கொண்டிருந்த மனக்குழப்பம் தீரும்.

வியாழன்-
எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வேலையில்லாதவர்களுக்கு இன்று வேலைக்கான தகவல் உறுதியாகும். பெண்களுக்குச் சொத்து சேர்க்கை உள்ளிட்ட ஆதாயங்கள் கிடைக்கும்.

வெள்ளி -
வீண் செலவுகள் ஏற்படும்.சிறிய அளவிலான மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. தொலைதூரப் பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

சனி-
இடம், பூமி தொடர்பான வியாபாரங்கள் சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.

ஞாயிறு -
வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். அது தொடர்பான நல்ல தகவல் இன்று கிடைக்கும். திருமணம் மற்றும் சொந்த வீடு வாங்குவது போன்ற சுப காரியங்கள் நடப்பதற்கு வாய்ப்பு உண்டு.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ துர்கை அம்மன் வழிபாடு அதிக நன்மைகளை ஏற்படுத்தித் தரும். துர்கை கவசம் தினமும் படித்து வாருங்கள்.நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
********************************************************************

உத்திரம்-
நன்மைகள் அதிகமாக நடக்கும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.


அலுவலகத்தில் உங்களுக்கான பதவி உயர்வு கிடைக்கும். பெரிய நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்பு வரும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும் .தொழிலில் எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும்.


இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பங்கு வர்த்தகத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். பெண்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.


சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமண முயற்சிகள் கைகூடும். தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.

செவ்வாய் -
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.வியாபார ஒப்பந்தங்கள் முடிவடையும். பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

புதன் -
எதிர்பாராத பண வரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். புதிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.மனத் திருப்தி உண்டாகும் நாள்.

வியாழன்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் இன்று செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பயணம் ஒன்று ஏற்படும். தொழில் தொடர்பாக முக்கிய நபர்களை சந்திப்பீர்கள்.

வெள்ளி -
திருமணம் சம்பந்தமான விஷயங்கள் இன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சொந்த வீடு வாங்குவதற்கான உதவி கிடைக்கும். முக்கியமான கடன் ஒன்று தீரும்.

சனி-
தேவையற்ற பயணங்கள் ஏற்படும். நண்பர்களுக்காக சில உதவிகளை செய்து கொடுக்க வேண்டி வரும். உறவினர்கள் உங்கள் உதவியை எதிர்பார்ப்பார்கள்.

ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். லாபம் தரும் ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்து தீபமேற்றி வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
***********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x