இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: மனதில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்: சிந்தனைத் திறன் அதிகரிக்கும். அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு உண்டு. சொத்து வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அரசாங்க வேலைகளில் அனுகூலமான நிலை காணப்படும்.

கடகம்: சின்ன வேலைகளைக்கூட பலமுறை அலைந்து முடிக்க வேண்டியது வரும். மாலை முதல் சாதகமான சூழல் ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவருடன் அளவுடன் பழகுங்கள்.

சிம்மம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

கன்னி: ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். குடும்பத்தினருடன் ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: சோர்வு, அலைச்சல் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த செய்தி வந்துசேரும்.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.

தனுசு: மனஉறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வீர்கள்.

மகரம்: எதிர்காலத்துக்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளை அவர்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

கும்பம்: பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. குடும்பத்தில் நிலவிவந்த சண்டை, சச்சரவுகள் மாலையில் நீங்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவு திட்டமிட்டதைவிட அதிகரிக்கும்.

மீனம்: குடும்பத்தினருடன் விவாதங்கள் வந்து போகும். பால்ய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in