இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். புண் ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பேச்சில் பொறுமை தேவை.

ரிஷபம்: வீண் கவலைகள், மன உளைச்சல்கள் நீங்கும். கலகலப்பாக சிரித்துப் பேசும் சூழல் அமையும். தந்தை வழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு. யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு காரியங்களை விறுவிறுப்பாக முடிப்பீர்கள். மனக் குழப்பம் நீங்கும். புதிய நபர்களால் நன்மை கிடைக்கும். தந்தை உடல்நலத்தில் கவனம் தேவை.

கடகம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவருக்கு உதவப் போய், சிக்கலில் சிக்கிக் கொள் ளாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராடவேண்டி வரும்.

சிம்மம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தினர் ஒத்து ழைப்பு அதிகரிக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள்.

கன்னி: அரசு, வங்கி காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள்.

துலாம்: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். வழக்கில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு உண்டாகும்.

விருச்சிகம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தாய் உடல்நலத்தில் கவனம் தேவை. புது வீடு, மனை, வாகனம் வாங்கு வதற்கான முயற்சிகளை தொடங்குவீர்கள். பணவரவு உண்டு.

தனுசு: வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு, வேலைகளை முடிப்பீர்கள். பேச்சாற்றல், சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் உடல்நலம் சீராகும்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்கள் மனக் குறைகளை சொல்லி ஆதங்கப் படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் அலைச்சல், செலவு அதிகரிக்கும்.

மீனம்: பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுங்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. சிபாரிசு, ஜாமீன், சாட்சிக் கையெழுத்திடுவது வேண்டாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in