

மேஷம்
கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். சில சிக்கல்களுக்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.
ரிஷபம்
தேவையற்ற மனக் குழப்பங்கள் நீங்கும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புதிய நபர்களால் நன்மை கிடைக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகும்.
மிதுனம்
தடைகள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். திடீர் பணவரவு மூலம், பழைய கடனை பைசல் செய்வீர்கள்.
கடகம்
வெளியூரில் இருந்து எதிர்பார்த்திருக்கும் நல்ல சேதி வரும். குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு இல்லத்துணைவர் ஆதரவாக இருப்பார்.
சிம்மம்
எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும்.
கன்னி
எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பிரியமானவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.
துலாம்
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல நண்பர்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும்.
விருச்சிகம்
உறவினர்கள், நண்பர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். வேலைச்சுமையால் களைப்புடன் காணப்படுவீர்கள். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். ஆன்மிக நாட்டம் கூடும்.
தனுசு
பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள். திடீர் பயணம், அலைச்சலால், செலவு, அசதி ஏற்படும். வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சித்துப் பேசக் கூடாது.
மகரம்
எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
கும்பம்
பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகி நிம்மதி கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பும், அதனால் ஆதாயமும் உண்டாகும்.
மீனம்
குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பல வகையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
*****************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |