Published : 10 Feb 2020 03:49 PM
Last Updated : 10 Feb 2020 03:49 PM

இந்த வாரம் உங்களுக்கு! நட்சத்திர பலன்கள் - திருவோணம், அவிட்டம், சதயம் (பிப்ரவரி 10 முதல் 16ம் தேதி வரை)  ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

இந்த வாரம் உங்களுக்கு! நட்சத்திர பலன்கள் - திருவோணம், அவிட்டம், சதயம்
(பிப்ரவரி 10 முதல் 16ம் தேதி வரை)


திருவோணம்-
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே செய்து முடிக்கும் வாரம். பணவரவு சரளமாக இருக்கும்.சொந்த வீடு வாங்கும் முயற்சி முழு வெற்றி தரும். நெருக்கடி தந்து கொண்டிருந்த கடன்கள் முழுமையாக அடைபடும்.


அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொழிலுக்கு தேவையான முதலீடுகள் கிடைக்கும் புதிய நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் ஏற்படும் தொழில் தொடர்பாக உதவிகள் செய்ய ஒரு சில நிபுணர்கள் முன்வருவார்கள்.


வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். வியாபார வளர்ச்சிக்காக விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த கருத்து ஏற்பாடுகள் அகலும். மன ஒற்றுமை ஏற்படும். கலைஞர்களுக்கு இப்பொழுது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.


மாணவர்கள் கல்வியில் புதிய உத்வேகம் பெறுவார்கள். கல்வியில் நல்ல முனைப்போடு கவனம் செலுத்துவார்கள். தொழில் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சுமுகமாக தீரும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகள் உண்டாகும். முக்கியமான சந்திப்புகள் தள்ளிப்போகும். வியாபார பேச்சுவார்த்தைகள் இழுபறியாக இருக்கும்.

செவ்வாய்-
வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நல்ல தகவல் ஒன்று கிடைக்கும்.

புதன்-
பலவித நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இடம் பூமி சம்பந்தப்பட்ட வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

வியாழன்-
பயணங்கள் அதிகமாக ஏற்படும். அதன் காரணமாக செலவுகளும் ஏற்படும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். வீட்டு உபயோகப் பொருட்களில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

வெள்ளி-
எடுத்துக்கொண்டு வேலைகள் அனைத்தும் சரியாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள்.
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

சனி-
எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானமாக செயல்பட வேண்டும். சிக்கனம் மிக அவசியம் .அனாவசிய செலவுகளைத் தவிர்க்கவேண்டும். பயணங்களை தள்ளிப்போடுவது நல்லது. முக்கியமான சந்திப்பு ஏதும் இருந்தால் அவற்றையும் ஒத்தி வையுங்கள்.

ஞாயிறு-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
நவக்கிரக வழிபாடு செய்யுங்கள். குறிப்பாக சந்திர பகவானுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யுங்கள். பிரச்சினைகள் தீரும். மனதில் நம்பிக்கை பிறக்கும்.
***********************************************************

அவிட்டம்-
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும்.தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கல்வித் தகுதிக்கு தகுந்த வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.


பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும், திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படும். பெரிய நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்யப்படுவீர்கள்.


வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். லாபம் இருமடங்காக ஏற்படும்.வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவது உட்பட அனைத்து விஷயங்களும் சாதகமாக இருக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

இந்த வாரம் -

திங்கள்-
சிறு சிறு கடன் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் தொடர்பாக முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். அதேபோல, ஒப்பந்தங்களும் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்யும் வாய்ப்பு உள்ளது.

செவ்வாய்-
வங்கியின் பழைய கடனை அடைத்து புதிய கடன் வாங்குவீர்கள். அதுதொடர்பாக சில செலவுகள் செய்ய வேண்டியது ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் இழுபறியாக இருக்கும்.

புதன்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசு தொடர்பான வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். வங்கிக்கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.தாமதமாகிக் கொண்டிருந்த பணவரவு இன்று கிடைக்கும்.

வியாழன்-
அதிக நன்மைகள் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான தேவையான உதவிகள் கிடைக்கும்.முக்கியமான கடன் பிரச்சினை ஒன்று பேசி முடிக்கப்படும்.

வெள்ளி-
திட்டமிட்ட காரியங்களிலும், திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பான தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படும். பெண்களுக்கு சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும். குழந்தை பாக்கியம் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும்.

சனி-
அனாவசிய செலவுகள் ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் கருத்துக்கள் கூற வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது.

ஞாயிறு-
சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடிவுக்கு வரும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
காஞ்சி காமாட்சி அம்மனை மனதில் நினைத்து வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்த காரியம் நினைத்தபடியே நடக்கும்.
***************************************************************

சதயம்-
முயற்சிகளில் எளிதான வெற்றி கிடைக்கும் வாரம். பணவரவுகள் தாராளமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.வெளிநாடு செல்லும் முயற்சி சாதகமாக இருக்கும். இல்லத்தில் சுப விசேஷங்கள் தொடர்பான விஷயங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும்.


அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். புதிய வியாபாரத்தை தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு. கிளைகள் துவங்கவும் முற்படுவீர்கள். கலைஞர்களுக்கு பலவிதமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்ததைவிட தாராளமாக இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் உண்டாகும். அலுவலகத்தில் அடுத்தவர்கள் வேலையை பார்க்க வேண்டியது வரும்.வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தில் அதிகமான பங்குகளை விட்டுத் தர வேண்டியது வரும்.

செவ்வாய்-
வங்கிக் கடன் கிடைக்கும். தனிநபர் கடன்கள் ஏதும் இருந்தால் அவற்றை பேசித் தீர்ப்பீர்கள். சில சலுகைகளோடு கடனை அடைப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகள் கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

புதன்
நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். குழந்தைகளின் கல்வியால் பெருமைப்படுவீர்கள்.

வியாழன்-
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

வெள்ளி-
அலுவலக விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். தொழில் தொடர்பான ஒரு நம்பிக்கையான நபரை சந்தித்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இல்லத்திற்கு உறவினர்கள் வருகை உண்டு. சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

சனி-
பலவித வியாபாரிகள் செய்து லாபம் இரட்டிப்பாக பெறுவீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த படி செய்து முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

ஞாயிறு-
புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும் . மறந்து போன உறவினர்களை சந்திப்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பிரத்யங்கிரா அம்மனுக்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
*****************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x