Published : 10 Feb 2020 02:33 PM
Last Updated : 10 Feb 2020 02:33 PM

இந்த வாரம் உங்களுக்கு! நட்சத்திர பலன்கள் - மூலம், பூராடம், உத்திராடம். (பிப்ரவரி 10 முதல் 16ம் தேதி வரை) - ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

இந்த வாரம் உங்களுக்கு! நட்சத்திர பலன்கள் - மூலம், பூராடம், உத்திராடம்.
(பிப்ரவரி 10 முதல் 16ம் தேதி வரை) -


மூலம்-
முடிவுகளை எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் பிரச்சினைகளைத் தரும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லவேண்டும்.


உத்தியோகத்தில் உங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.பணியில் ஒரு சில தவறுகள் நடக்கும் வாய்ப்பு உள்ளது.தொழிலில் சீரான வளர்ச்சி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகலாம்.


பெண்களுக்கு பெரிய அளவிலான பிரச்சினைகள் ஏதும் இருக்காது. ஆனாலும் குடும்ப உறவுகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். பேசுகின்ற பேச்சுகளிலும், செயல்களிலும் கவனம் தேவை.


மாணவர்கள் கல்வியில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளை மிகச்சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த ஒரு சில உதவிகள் கிடைக்கும். வியாபாரப் பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். பணவரவு கடைசி நேரத்தில் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். அலைச்சல் அதிகரிக்கும்.

செவ்வாய்-
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக இருக்கும். குறிப்பாக சொத்து வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் லாபம் தருவதாக இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி, லாபம் ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

புதன்-
வீண் அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த முக்கியமான விஷயங்கள் ஏமாற்றம் தரலாம். ஒப்பந்தங்கள் போடுவதில் தாமதம் ஏற்படும். அலுவலக வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் செய்த வேலையை மீண்டும் செய்ய வேண்டியது வரும்.

வியாழன்-
ஆரோக்கியத்தில் இருந்த அச்சம் விலகும். மருத்துவச் செலவுகள் குறையும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி-
அலுவலகத்தில் அடுத்தவர் வேலையை பார்க்க வேண்டியது வரும். கூடுதல் பணிச்சுமை ஏற்படும். இல்லத்திற்கு உறவினர்கள் வருகை ஏற்படும். அதன் காரணமாக செலவுகளும் உண்டு.வியாபாரம் சீராக இருக்கும். பங்கு வர்த்தகத்தில் எதிர்பார்த்ததைவிட குறைவான லாபம் இருக்கும்.

சனி-
நெருக்கடி தந்த கடன் பிரச்சினையை பேசி சமாளிப்பீர்கள். வங்கியில் ஏற்கனவே இருந்த கடனை அடைத்து புதிய கடன் பெறும் முயற்சியில் இறங்குவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு-
பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். முக்கியமான சந்திப்புகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். வியாபாரப் பேச்சுவார்த்தைகளில் ஏமாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுங்கள்.வெண்ணெய் உருகுவது போல் உங்கள் பிரச்சினைகளும் குறைந்து நன்மைகள் அதிகமாகும்.
**********************************************************

பூராடம் -
எதிர்பார்த்த உதவிகளும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் காசோலைகள் வழங்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
வியாபார ஸ்தலங்களில் வாடிக்கையாளர்களிடம் கவனமாகப் பழக வேண்டும். வாடிக்கையாளர்களின் வருத்தத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். போட்டி நிறுவனங்களை சமாளிக்கும் திட்டங்களை வல்லுநர்களுடன் ஆலோசனை செய்வீர்கள்.
பெண்களுக்கு சொத்து சேர்க்கை ஆடை ஆபரணச் சேர்க்கை போன்றவை ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை பலப்படும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். கல்வியில் இருந்த குழப்ப நிலை படிப்படியாக குறையும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்.பணவரவு சரளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

செவ்வாய்-
வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினர் நலனுக்காக ஒரு சில முதலீடுகளை செய்வீர்கள். வீடு வாங்கும் கனவு நனவாகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடிவடையும்.

புதன்-
பரபரப்பாக இயங்கி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். ஆதாயம் இருமடங்காக இருக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான வங்கிக் கடன் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான தொழிலில் ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வியாழன்-
செலவுகள் அதிகமாக ஏற்படும். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களோடு நட்பாக இருங்கள். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரக் கடைகளில் வாடிக்கையாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம்.

வெள்ளி-
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கலைஞர்களுக்கு கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பார்கள்.

சனி-
உங்களால் மற்றவர்களுக்கு ஆதாயம் ஏற்படும். ஆலய வழிபாடு செய்ய முற்படுவீர்கள். குடும்பத்தினரோடு நேரத்தை செலவிடுவீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களை புதிதாக மாற்றி தருவீர்கள். வாகன பழுது உள்ளிட்டவைகளை சரி செய்வீர்கள்.

ஞாயிறு-
நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும்.வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு சொத்து சேர்க்கை மற்றும் திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் வழிபாடு செய்யுங்கள். விநாயகருக்கு எருக்க மலர் மாலை சூட்டுங்கள்.நன்மைகள் பெருகும். எதிர் பார்த்தது கிடைக்கும்.
*****************************************************************

உத்திராடம் -
சுபச் செலவுகள் அதிகமாக ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப விஷயங்களுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவீர்கள். கடன் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பணவரவு சரளமாக இருக்கும்.


அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகி தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.


மாணவர்களின் கல்வியில் நல்ல வளர்ச்சி உண்டாகும். கல்வியில் ஆர்வம் பிறக்கும். பெண்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பார்கள். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.சொத்துக்கள் உங்கள் பெயரில் வாங்கப்படும்.
கலைஞர்களுக்கு இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த ஒப்பந்தங்கள் இப்போது கிடைக்கும்.ஒரு சிலருக்கு அயல்நாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பணவரவு சரளமாக இருக்கும்.வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

செவ்வாய்-
அலுவலகத்திலும் பணி செய்யும் இடத்திலும் தேவையான உதவிகள் கிடைக்கும். உங்கள் வேலையை மற்றவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். பணவரவு தாராளமாக இருக்கும். நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த முக்கியமான உதவி இன்று கிடைக்கும்.

புதன்-
அலைச்சலும் அலைச்சலுக்கு உண்டான ஆதாயமும் கிடைக்கும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தம் ஏற்படும். முக்கியமான வேலைகளில் சிறப்பான நன்மைகள் நடக்கும். சுப காரியச் செலவுகள் ஏற்படும்.

வியாழன்-
கெடுக்காத முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் பணவரவு சரளமாக இருக்கும் வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும் தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முதலீடுகள் கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. வங்கிக்கடன் உறுதியாகும்.

வெள்ளி-
சிக்கனமாக இருக்கவேண்டும். அனாவசியச் செலவுகளை தவிர்க்க வேண்டும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். சாலை விதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் செலுத்த நேரிடும்.

சனி-
சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக இருக்கும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் மாற்றும் சிந்தனை உண்டாகும். புதிய வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ஞாயிறு-
பொறுமை மிக மிக அவசியம். உங்களை சோதித்து பார்ப்பதற்காகவே பலரும் வருவார்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம் நண்பர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். பகையாக மாறும் வாய்ப்பு உள்ளது.

வணங்கவேண்டிய தெய்வம்-
நவக்கிரகத்தில் இருக்கும் சூரிய பகவானை வணங்குங்கள். ஆதித்ய ஹ்ருதயம் கேட்டு வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். மன நிம்மதி ஏற்படும்.
*********************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x