Published : 10 Feb 2020 10:07 AM
Last Updated : 10 Feb 2020 10:07 AM

இந்த வாரம் உங்களுக்கு! நட்சத்திர பலன்கள் - அஸ்வினி, பரணி, கார்த்திகை : (பிப்ரவரி 10 முதல் 16ம் தேதி வரை) ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

இந்த வாரம் உங்களுக்கு! நட்சத்திர பலன்கள் - அஸ்வினி, பரணி, கார்த்திகை :


அஸ்வினி -


நன்மைகள் பலவாறாக நடக்கும். ஆனாலும் நிதானம் மிக மிக அவசியம். உடனடியாக முடிவுகளை எடுக்காமல் நிதானமாக ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும்.


உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். ஒருசிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். சகோதரர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் தீரும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும். வியாபாரிகளுக்கு சீரான வளர்ச்சியும் லாபமும் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
முயற்சிகளில் முன்னேற்றமும் ஏற்படும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமண வயதில் பிள்ளைகள் இருப்பவர்களுக்கு, பிள்ளைகளின் திருமண முயற்சிகள் கைகூடும்.

செவ்வாய்-
எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் லாபம் இருமடங்காக கிடைக்கும்.

புதன்-
காசோலைகளை கவனமாக கையாளவேண்டும். ஒப்பந்தங்கள் போடுவதாக இருந்தால் மிகுந்த கவனமும் எச்சரிக்கை உணர்வும் தேவை. பயணங்கள், முக்கிய சந்திப்புகள் தவிர்க்க வேண்டும்.

வியாழன்-
சொத்து சம்பந்தமான வியாபார முயற்சிகள் சாதகமாக இருக்கும் கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வெள்ளி-
அலைச்சல்கள் அதிகரிக்கும். செலவுகள் ஏற்படும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படுவதில் இழுபறியான நிலை உண்டாகும். வியாபாரிகள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சனி-
தொல்லை தந்து கொண்டிருந்த கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். தொழில் தொடர்பாக வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்களின் உயர்கல்வி முயற்சிகள் சாதகமாக இருக்கும். வேலை தொடர்பான தேர்வுகளில் உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு-
வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் பராமரிப்பு தொடர்பாக செலவு செய்ய வேண்டியது வரும். முக்கியமான சந்திப்புகள் ஏதும் இருந்தால் ஒத்தி வையுங்கள். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் தேவையற்ற விவாதங்களை வைத்துக்கொள்ளவேண்டாம்.

வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீ துர்கை அம்மனுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். ஸ்ரீ துர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் தொடரும்.
*************************************************************

பரணி -
பெரும் நன்மைகள் நடைபெறும் வாரம். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.


உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உறுதியாகும். வெளிநாடு சென்று வேலை செய்யும் முனைப்புடன் இருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல தகவல் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அதிகமாக இருக்கும். எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைக்கும்.


வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி, புதிய கிளைகள் தொடங்குவது போன்றவை நடக்கும். கலைஞர்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
வெளிநாட்டு வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

செவ்வாய்-
குடும்பத்தில் அமைதி நிலவும் நவீன பொருட்களை குடும்பத்தினருக்கு வாங்கித் தருவீர்கள் பணவரவு திருப்திகரமாக இருக்கும். சுற்றுலா தொடர்பான திட்டங்களை வகுப்பீர்கள்.

புதன்-
மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும். வீட்டில் மங்கலகரமான விசேஷங்கள் நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

வியாழன்-
உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும் நண்பர்களிடமும் அலுவலகத்திலும் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம்.

வெள்ளி-
சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இணக்கமான கருத்தொற்றுமை ஏற்படும். ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபாரங்களில் லாபம் கிடைக்கும்.

சனி-
ஆலய வழிபாடு குடும்பத்தோடு செய்ய முற்படுவீர்கள். புண்ணிய காரியங்கள் செய்ய விருப்பம் ஏற்படும். குடும்பத்தினரின் முக்கிய பிரச்சினைகளை சரி செய்து தருவீர்கள்.

ஞாயிறு-
தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழிலுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகளை வாங்குவீர்கள். வியாபார சந்திப்புகள் லாபகரமாக இருக்கும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
காலை மாலை இருவேளைகளிலும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். அல்லது காது குளிரக் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*********************************************************

கார்த்திகை-
உங்கள் தேவைகள் அனைத்தும் சரியான நேரத்தில் பூர்த்தியாகும். மனதில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் தீரும். உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும்.


குடும்பத்தினருடன் ஏற்பட்டிருந்த சில சங்கடமான சூழ்நிலைகள் சுமுகமாக மாறும். பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் காண்பார்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.


மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் அமோகமான முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய்-
வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடுகளில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு குடியுரிமை தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தமிழ் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரம் செழிப்பாக இருக்கும்.

புதன்-
முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக தீரும். வங்கிக்கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஆசிரியர் ஒருவரின் உதவி கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் தொடர்பான புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

வியாழன்-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். வருமானம் இருமடங்காக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். வியாபாரத்தில் அமோகமான வளர்ச்சி உண்டாகும். பங்குவர்த்தகத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

வெள்ளி-
உறவினர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியது வரும். சொத்துக்கள் தொடர்பாக பங்காளிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேச வேண்டும்.

சனி-
கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். முக்கியமான கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்பதற்கு உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். தொழில் தொடர்பாக பயணம் ஏற்படும்.

ஞாயிறு-
குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பீர்கள். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக செலவு செய்ய வேண்டியது இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். மாமன் வகை உறவுகளிடம் உதவிகள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஆறுமுகப் பெருமானை வணங்குங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். நெருக்கடிகள் குறையும். மனக்கவலை தீரும்.
********************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x