Published : 10 Feb 2020 09:34 AM
Last Updated : 10 Feb 2020 09:34 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்

பழைய வாகனத்தை மாற்றி, புதிதாக வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பேச்சில் பொறுமை தேவை.

ரிஷபம்

வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தேடிவரும். உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள், கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்

பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனாலும், எடுத்துவைக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். சகோதர வகையில் மனநிம்மதி கிடைக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

கடகம்

பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான திருப்பம் ஏற்படும்.

சிம்மம்

எதற்கும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக செயல்படுங்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். ஆன்மிக நாட்டம் கூடும்.

கன்னி

திட்டமிட்டபடி வெளியூர் பயணங்கள் அமையும். விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். திடீர் பணவரவு உண்டு. அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.

துலாம்

பெரிய திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவீர்கள். நீண்டகாலமாக எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். முக்கியஸ்தர்களின் நட்பு கிடைக்கும். அரசு, வங்கி வகையில் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்

கடந்தகால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

தனுசு

எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலாக இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள், புதிய நபர்களால் ஆதாயம், லாபம் உண்டாகும்.

மகரம்

சலிப்பு, வெறுப்பு, தாழ்வு மனப்பான்மைக்கு இடம் தராமல் நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுங்கள். ஆன்மிகம், யோகா, தியானம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பணவரவு உண்டு.

கும்பம்

சிற்சில இடையூறுகள், தடைகள் வந்தாலும், நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேறுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். பொருட்கள் சேரும்.

மீனம்

உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடித்து, பாராட்டு பெறுவீர்கள். வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பும்.

*************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x