இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திடீர் பயணம் உண்டு.

மிதுனம்: தாயாருடன் எதிர்பாராத வகையில் மனத்தாங்கல் வரும். வாகனத்தில் செல்லும்போது, சாலையை கடக்கும்போது கவனம் தேவை. மின்சாதனங்கள் திடீரென பழுதாகும்.

கடகம்: சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த தொகை தாமதமாக கைக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வாகனம் செலவு வைக்கும்.

சிம்மம்: தொட்ட காரியங்கள் வெற்றியடையும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். வீடு கட்ட அனுமதி கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். விருந்தினர் வருகை உண்டு.

துலாம்: தந்தைவழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்து மோதல்களும், பிரச்சினைகளும் வரக்கூடும்.

தனுசு: மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். விருந்தினர் வருகை உண்டு. வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

மகரம்: மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். அவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மீனம்: ஆன்மிக ஆற்றல், காலத்தை உணரும் சக்தி உங்களுக்கு ஓரளவு கிடைக்கும். பணவரவு உண்டு. மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் மதிப்பார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in