Published : 03 Feb 2020 03:57 PM
Last Updated : 03 Feb 2020 03:57 PM

இந்த வார நட்சத்திர பலன்கள் (பிப்ரவரி 3 முதல் 9 வரை) ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை

'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -
முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து மனநிம்மதி ஏற்படும் வாரம். கடன் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நெருக்கடி தந்து கொண்டிருந்த சூழ்நிலைகள் படிப்படியாக மாறும். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கியிருந்தால் அந்த சிக்கல்கள் தீரும். உங்களுக்கு எதிர்ப்பு காட்டிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறுவார்கள். தொழில் தொடர்பான நிர்ப்பந்தங்கள் விலகும். அரசு வழியில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வரும். பெண்களுக்கு கடன் பிரச்சினைகளிலிருந்து தீர்வு கிடைத்து மன நிம்மதி ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாகும். மாணவர்கள் கல்வியில் இருந்த மந்தநிலை மாறி படிப்பில் ஆர்வம் அதிகமாகும். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலைகள் மாறி வளர்ச்சிப் பாதைக்கு செல்லும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் தேடிவரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரம் வளர்ச்சி அமோகமாக இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்திருந்த தகவல் கிடைக்கும்.

செவ்வாய்-
தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணும் நாள். வியாபாரத்தில் இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் கிடைக்கப்பெறுவீர்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும்.குடும்ப நலம் சார்ந்து சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.

புதன்-
வீடு தேடி நல்ல தகவல்கள் வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

வியாழன்-
பெருமளவு நன்மைகள் ஏற்படும்.வெளிநாடு செல்வதற்கான விசா தொடர்பான தகவல் கிடைக்கும். நண்பர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வெள்ளி-
சொத்து தொடர்பாக ஏற்பட்டிருந்த வில்லங்கங்கள் தீரும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழியில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வரும். வங்கி தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

சனி-
அலுவலக பணியில் தேங்கியிருந்த வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வர வாய்ப்பு ஏற்படும். ஒரு சில எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

ஞாயிறு-
நண்பர்களை சந்தித்து ஆனந்த பெறுவீர்கள் உறவினர்கள் வருகை ஏற்படும். தொழில்துறை வல்லுநர்கள் சந்திப்பு ஏற்படும் அதன்மூலம் தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக முடிவுக்கு வரும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
துர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். மேலும் நெருக்கடிகள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும்.
******************************************************************

மிருகசீரிடம் -
முயற்சிகளில் ஒரு சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும் விடாமுயற்சியால் சாதித்துக் காட்டுவீர்கள். அலுவலகத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் படிப்படியாக விலகும். அரசு வழியில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். தடைபட்டிருந்த சுப காரிய விசேஷங்கள் மீண்டும் தொடரும்.வியாபார வளர்ச்சி சீராக இருக்கும் கலைத்துறை சார்ந்தவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். பெண்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்கள் நடைபெறும் வாரமாகவே இருக்கிறது. இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் மறையும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வெளிநாடுகளில் வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

செவ்வாய்-
பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். அலுவலக விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். தொழில் தொடர்பான முக்கிய நபர்களின் சந்திப்பால் நன்மைகள் நடக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முக்கியமான பிரச்சனை இன்று பேசி தீர்க்கப்படும்.

புதன்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

வியாழன்-
தேங்கிக் கிடந்த வேலைகளை அனைத்தும் இன்று செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை கிடைக்கும். அக்கம்பக்கத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வெள்ளி-
தொழில் செய்யும் இடத்திலும் வியாபார இடத்திலும் செலவுகள் அதிகமாக ஏற்படும். கடன் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதங்கள் ஏற்படும். பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம்.

சனி-
வங்கிக் கடன் தொடர்பான முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இன்று சரிபார்க்கப்படும். தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும்.

ஞாயிறு-
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப பராமரிப்பு செலவுகள் அதிகமாக ஏற்படும். வாகன மாற்ற சிந்தனை ஏற்படும். தவணை முறை திட்டத்தில் பொருட்கள் வாங்குவீர்கள்.

வணங்கவேண்டிய தெய்வம்-
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். பைரவருக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். பெரும் நன்மைகள் ஏற்படும். எதிர்ப்புகள் காணாமல் போகும்.
***************************************************************

திருவாதிரை -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். ஒரு சில தடைகள் ஏற்பட்டாலும் தடைகளை மீறி வென்று காட்டுவீர்கள். சகோதரர்களால் அதிக நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். வீண் பிடிவாதம் வேண்டாம்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகளை குறித்த நேரத்திற்குள் முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படும். தொழிலில் போட்டி நிறுவனங்களில் நெருக்கடி அதிகரிக்கும். புதிய யுக்திகளை கையாண்டு அவற்றை சமாளிக்கும் திறமை வெளிப்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஊடகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும், உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள்-
மனக் கவலைகள் அதிகரிக்கும். தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகத்திலும் தொழில் செய்யும் இடத்திலும் நெருக்கடிகள் தோன்றும்.

செவ்வாய்-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். சுறுசுறுப்பாக பணியாற்றி எடுத்துக்கொண்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

புதன்-
வெளிநாடுகளில் வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். மாமன் வகை உறவுகளால் ஆதாயம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.

வியாழன்-
வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். லாபம் பெருகும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி-
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புகள் மறையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அறிகுறிகள் தெரியும்.சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும்.

சனி-
செலவுகள் ஏற்படும். வாகன பழுது மற்றும் வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடுதலாகும். வீண் விரயங்களால் மன உளைச்சல் ஏற்படும். புதிய முயற்சிகளில் சுணக்கம் ஏற்படும்.

ஞாயிறு-
ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபார பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வணங்கவேண்டிய தெய்வம்-
கோளறு பதிகம் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் படித்து வாருங்கள். நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். காகத்திற்கு தினமும் உணவளியுங்கள்.

********************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x