இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கி சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் நடந்து முடியும். ஆன்மிக நாட்டம் கூடும்.

ரிஷபம்: எல்லாவற்றுக்கும் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங் கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். கோபத்தால் வீண் இழப்புகள் ஏற்படும். பேச்சில் நிதானம் அவசியம்.

மிதுனம்: பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். உடல்நலத்தில் அதிக கவனம் அவசியம். அக்கம் பக்கத்தினரின் செயல்பாடுகள் கோபத்தை ஏற்படுத்தும். எக்காரியத்திலும் பொறுமை தேவை.

கடகம்: அதிரடியாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். பணவரவு, பொருள் வரவு உண்டு.

சிம்மம்: நீங்கள் விரும்பிய புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். பிள்ளைகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பணிகளை ஒப்படைப்பார்கள்.

கன்னி: காரிய தாமதம் நீங்கி, எல்லா வேலைகளும் விறுவிறுப்பாக நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்ப்பீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு.

துலாம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கண வன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சிலர் உதவுவதுபோல வந்து உபத்திரவம் தருவார்கள். பணவரவு உண்டு.

விருச்சிகம்: உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படு வீர்கள். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.

தனுசு: பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டாகும். வழக்கில் சாதக மான திருப்பங்கள் ஏற்படும். புதிய நபர்களால் லாபம் உண்டு.

மகரம்: கனவு நனவாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீண், ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

கும்பம்: இழுபறியாக உள்ள சில காரியங்களை அதிகாரிகளின் உதவியுடன் முடிப்பீர்கள். பெற்றோருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பெரிய இடத்தில் வேலை கிடைக்கும்.

மீனம்: போட்டி, சவால்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in