Published : 31 Jan 2020 09:20 AM
Last Updated : 31 Jan 2020 09:20 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். சுபகாரிய செலவுகள் இருந்துகொண்டே இருக்கும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பனிப்போர் மறையும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும்.

மிதுனம்: இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்.

கடகம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிட்டும். குடும்பத்தில் குதூகலமான நிலை காணப்படும். அரசியல் பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

சிம்மம்: வேலைச்சுமை, டென்ஷன், நண்பர்களுடன் கருத்துமோதல் வரக்கூடும். அரசு விவகாரங்களில் அவசரம் காட்ட வேண்டாம். சொந்தபந்தங்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும்.

கன்னி: குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பணப்புழக்கம் கணிசமாக உயரும். மனைவிவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

துலாம்: தன்னம்பிக்கை பிறக்கும். திருமணப் பேச்சுவார்த்தை சுபமாக முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகளின் தவறுகளை சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள்.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

தனுசு: பழைய உறவினர்கள் தேடிவந்து பேசுவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாயாருடன் கருத்துமோதல்கள் வரும். திடீர் பயணம் ஏற்படலாம்.

மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

கும்பம்: உங்களில் செயலில் புத்திசாலித்தனம் வெளிப்படும். சொத்து தொடர்பான பிரச்சினைகளை சுமுகமாக பேசி முடிப்பீர்கள். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.

மீனம்: புதியவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவுடன் பழகுங்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x