Published : 27 Jan 2020 01:25 PM
Last Updated : 27 Jan 2020 01:25 PM

இந்த வார நட்சத்திர பலன்கள் (ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை)  அஸ்தம், சித்திரை, சுவாதி


’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


அஸ்தம் -


அதிக நன்மைகள் நடக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தொழில் அபார வளர்ச்சி ஏற்படும்.


வியாபாரிகள் நல்ல லாபம் கிடைக்கப்பெறுவார்கள். புதிய வியாபாரக் கடைகள் ஆரம்பிப்பார்கள். பெண்கள் தங்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக இந்த வாரம் இருக்கும். ஆபரண சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சி கைகூடும்.


மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

இந்த வாரம்-

திங்கள்-
ஒரு சில விஷயங்கள் சாதகமாக இருக்கும். பணவரவு தாமதமாகும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் நீண்டு கொண்டே போகும். வேலையில் கூடுதல் சுமை ஏற்படும்.

செவ்வாய்-
கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். தொழில் வளர்ச்சி ஏற்படும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

புதன்-
வெளிவட்டார பழக்க வழக்கங்கள் நன்மை தருவதாக இருக்கும். புதிய நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட வேலைகளில் சுணக்கம் ஏற்படும். மனம் அமைதி இல்லாமல் தவிக்கும். குழப்பங்கள் அதிகரிக்கும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.

வெள்ளி -
திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

சனி-
திடீர் செலவுகள் ஏற்படும். வாகனப் பழுது உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகள் கூடும். மின்சாதனப் பொருட்கள் மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நிதானம் இழக்கக் கூடாது.

ஞாயிறு -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
அபிராமி அந்தாதி பாராயணம் செய்யுங்கள். முடிந்தால் திருக்கடையூர் அபிராமி அம்மனை வணங்கி வாருங்கள். தடைகள் அகலும். நினைத்தது நடக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.
***********************************************************

சித்திரை -
பெருமளவு நன்மைகள் நடைபெறும். நினைத்தது நிறைவேறும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பாராத லாபகரமான ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும்.


உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடர்பான முக்கியமான நபரைச் சந்திப்பதால் தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.


திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தோல்வியடைந்த பாடங்களை மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.


வேலை இல்லாதவர்களுக்கு இந்த வாரம் நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைத்து, வேலைவாய்ப்பு உறுதியாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். புதிய வியாபார முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
அலைச்சல்கள் அதிகரிக்கும் தேவையற்ற பயணங்கள் ஏற்படும் எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் தேவையில்லாத மனச் சங்கடங்களை உருவாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம்.

செவ்வாய் -
முக்கிய கடனை திருப்பிச் செலுத்துவீர்கள். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். பணவரவு சரளமாக இருக்கும்.

புதன் -
பணவரவில் திருப்தி ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறி பத்திரப்பதிவு நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் புதிய வியாபாரக் கிளைகளை ஆரம்பிப்பார்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்குவீர்கள்.

வியாழன் -
அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பெண்களுக்கு சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி-
வீண் அலைச்சல்கள் ஏற்படும். வாகனப் பழுது ஏற்படும். சம்பந்தமில்லாத செலவுகளைச் செய்ய வேண்டியது இருக்கும். சிக்கனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மன உளைச்சல் ஏற்படும்.

சனி -
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். நீங்களும் மறுக்காமல் செய்துகொடுப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையை நீங்கள் ஏற்றுச் செய்யவேண்டியது வரும். வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் மற்றவர்களுக்கு போய்ச்சேரும். உங்களுக்கு பேரும்புகழும்தான் கிடைக்கும்.

ஞாயிறு -
அலுவலகத்தில் முடிக்க முடியாத வேலைகளை இன்று முழுமையாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும். பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
தட்சிணாமூர்த்தி குருபகவானுக்கு கொண்டைக் கடலை நிவேதனம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*****************************************************************


சுவாதி -
வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் , பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் ஏற்படும்.


இதுவரை தொழில் செய்யாதவர்களுக்குக் கூட இப்போது தொழில் தொடங்கும் ஆர்வம் ஏற்படும். அதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். பெண்களுக்கு தந்தை வழி சொத்துகள் சேரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.


திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய கல்வி கற்கும் ஆர்வம் உண்டாகும், அது தொடர்பான பயிற்சி வகுப்புகளில் சேர்வீர்கள். கலைஞர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அயல்நாடு சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
வியாபாரத்திலும் தொழிலிலும் இருமடங்கு லாபம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். ஒரு சில கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

செவ்வாய் -
நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலை இன்று முடிந்துவிடும். அதனால் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். தன வரவு தாராளமாக இருக்கும். இடம் வீடு சம்பந்தமான வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக முடியும்.

புதன் -
அலுவலக வேலைகளில் முக்கிய பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டியது வரும்.வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாகும்.தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

வியாழன் -
அதிக நன்மைகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வெள்ளி -
சுபகாரிய விஷயங்களுக்காக செலவு செய்ய வேண்டிவரும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி-
இழுபறியாக இருந்த வேலையை இன்று திட்டமிட்டு சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். பணவரவு உண்டு.தொலைபேசி வழித் தகவல் மனதிற்கு உற்சாகத்தை தரும்.வியாபாரம் சம்பந்தமாக பயணம் ஏற்படும். பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

ஞாயிறு -
வெளிநாடு செல்லும் முயற்சிக்கான முக்கிய தகவல் இன்று கிடைக்கும். நீண்ட நாளாக சந்திக்க முடியாமல் இருந்த நபரை இன்று சந்திப்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக முடியும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
தாய் மூகாம்பிகை அம்மனை வணங்குங்கள்.கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள் அல்லது ஒலிவடிவில் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
******************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x