Published : 27 Jan 2020 09:24 AM
Last Updated : 27 Jan 2020 09:24 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்

எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். ஆன்மிக காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

ரிஷபம்

வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். அவர்களது துணையுடன், இழுபறியாக உள்ள வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்

வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்தும் பணிகள் நல்லபடியாக முடியும். சிலருக்கு அரசுப் பதவிகள் தேடிவரும். இழந்ததை பெறுவீர்கள். சமூக அந்தஸ்து, மதிப்பு, மரியாதை உயரும்.

கடகம்

ஆன்மிக யாத்திரை சென்று வருவீர்கள். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். அலட்சியப்போக்கால் சில சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளதால், எதிலும் கவனம் தேவை.

சிம்மம்

தடைபட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடியும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள். பிரபலங்களுடன் நெருக்கமாவீர்கள்.

கன்னி

மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். புதிய நபர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

துலாம்

தன்னம்பிக்கை, தைரியம் பிறக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். முக்கிய நபர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும்.

விருச்சிகம்

அலைச்சல், அசதி, சோர்வு நீங்கி, உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தூக்கமின்மை விலகும். தாய் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.

தனுசு

இளைய சகோதர வகையில் ஆதாயம் பெறுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களால் நன்மை பிறக்கும். வாகனம், ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள்.

மகரம்

புதிய முயற்சிகளில் ஆர்வம் பிறக்கும். எப்போதோ வரவேண்டிய பணம் இப்போது வந்து, தக்க சமயத்தில் கைகொடுக்கும். பழைய கடனை தீர்ப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

கும்பம்

உடல்நலக் குறைவு, மனச்சோர்வு, பதற்றம் வந்துபோகும். உடன்பிறந்தவர்கள் இடையே தேவையற்ற மனக்கசப்புகள் வந்து நீங்கும். யாருடனும் வீண் விவாதங்கள் வேண்டாம்.

மீனம்

சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்துவார்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை.

***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x