இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்டகால கடனை பைசல் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். எடுத்த வேலையை உடனுக்குடன் முடிப்பீர்கள்.

ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பண பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் வரும். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டு.

மிதுனம்: மனஇறுக்கம் குறையும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும்.

கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கு பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும்.

கன்னி: மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். திடீர் பயணம் ஏற்படலாம்.

விருச்சிகம்: குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். விலகி இருந்த சொந்தபந்தங்கள் திரும்பி வருவார்கள்.

தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. வாயு பதார்த்தங்கள், வெளி உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

மகரம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கும்பம்: சுபநிகழ்ச்சிகள், பொதுவிழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். நவீனரக வாகனம், மின் சாதனங்கள் வாங்குவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

மீனம்: கடின உழைப்பால் காரியங்களை சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோசிதமாகப் பேசி தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in