இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: உங்களின் உழைப்புக்கேற்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அவர்களை நெறிப்படுத்துவீர்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத்தொல்லை உண்டு.

ரிஷபம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவு வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

மிதுனம்: சகோதரர்களால் பயனடைவீர்கள். பூர்வீக சொத்து உங்கள் கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

கடகம்: பணப்புழக்கம் கணிசமாக உயரும். உடல்நிலை சீராகும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: தடைகளைக் கடந்து காரியங்களை சாதிப்பீர்கள். சின்னச் சின்ன பிரச்சினைகள் குடும்பத்தில் தலைதூக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள்.

கன்னி: வீண் அலைச்சலுக்கு ஆளாவீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும். பயணங்கள் அதிகரிக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

துலாம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

விருச்சிகம்: பொறுப்பு, பதவி தேடிவரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள்.

தனுசு: திடீர் திருப்பங்கள் உண்டாகும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த தொகை கைக்கு வரும். திடீர் பயணம் உண்டு.

மகரம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலி பேச்சுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

கும்பம்: நல்ல வாய்ப்புகள் தேடிவரும். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணங்கள், கலைப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்: பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விருந்தினர்கள் வருகை உண்டு. பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in