இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழல் நிலவும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் பொழுதைக் கழிப்பீர்கள்..

மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் உடனே முடியும்.

கடகம்: திட்டமிட்டது ஒன்று, நடப்பது வேறாக இருக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வாகனம் செலவு வைக்கும்.

சிம்மம்: எளிதில் முடியக்கூடிய காரியங்கள்கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் செயல்படுவார்கள்.

கன்னி: உங்களின் புது முயற்சிக்கு பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய கடன் பிரச்சினை தீரும். ஆன்மிக சுற்றுலா செல்வீர்கள்.

துலாம்: மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

விருச்சிகம்: எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். சகோதரர் வகையில் சுபச்செலவு உண்டு. ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

தனுசு: ஓய்வு எடுக்க முடியாதபடி வேலைகள் அடுத்தடுத்து இருந்து கொண்டேயிருக்கும். வாயு கோளாறால் அவஸ்தைகள் ஏற்படக் கூடும். உணவில் கட்டுப்பாடு அவசியம்.

மகரம்: அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். பால்ய நண்பர் தக்க சமயத்தில் உதவுவார்.

கும்பம்: தடைபட்டிருந்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். வழக்கில் சாதகமான சூழல் நிலவும்.

மீனம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். முன்கோபம் குறையும். சமூகத்தின் முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in