Published : 06 Jan 2020 03:36 PM
Last Updated : 06 Jan 2020 03:36 PM

இந்த வார நட்சத்திரப் பலன்கள் - (ஜனவரி 6 முதல் 12 வரை) மூலம், பூராடம், உத்திராடம்: எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? 


'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மூலம் -
பண வரவு திருப்திகரமாக இருந்தாலும், மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். தெளிவாக முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த சக ஊழியர் அலுவலகத்தை விட்டு வெளியேறுவார்.
தொழிலில் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் இருமடங்காக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். புதிய ஏஜென்சி, டீலர்ஷிப் பெறுவீர்கள். பெண்கள் தாங்கள் விரும்பிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு இப்பொழுது திருமணம் உறுதியாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். புதிய மொழி அல்லது கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைக்கும், சொத்துக்கள் வாங்குவார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
பெருமளவு நன்மைகள் நடைபெறும். தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கும்.

செவ்வாய் -
அமைதியாக இருப்பதும் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பதும் நல்லது.தேவையற்ற பிரச்சினைகளை தலையிட வேண்டாம்.

புதன் -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

வியாழன் -
பராமரிப்புச் செலவுகள் கூடும். அலுவலகத்தில் செய்த வேலையை மீண்டும் செய்ய வேண்டியது வரும். சக ஊழியர்களின் வேலையை செய்ய வேண்டியது கூட வரலாம்.குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

வெள்ளி -
தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. நன்மைகள் பலவாகும்.

சனி-
அலைச்சல் அதிகமாக இருக்கும். வாகனப் பழுது ஏற்படும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும். மின்சாதனப் பொருட்கள் பழுதடையும்.

ஞாயிறு -
எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஆஞ்சநேயர் பெருமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். பிரச்சினைகள் குறையும். நிம்மதி உண்டாகும்.
*********************************************************

பூராடம் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதை விட வருமானம் அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். எதிர்ப்பு தந்த ஊழியர்கள் பணிந்து போவார்கள். தொழிலில் எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடன் கூட்டு சேர பலரும் முன்வருவார்கள். முதலீடுகள் பெருகும்.பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் இருமடங்காக இருக்கும்.
ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் வளர்ச்சி பெறும். பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சகோதர வழியில் இருந்த மனவருத்தங்கள் அகலும். மாணவர்கள் தங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வெளிநாடு சென்று கல்வி கற்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

இந்த வாரம் -
திங்கள் -

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளிநாடு சென்று வேலை பார்க்கும் முயற்சி வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரம் செழிப்பாக இருக்கும்.

செவ்வாய் -
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரங்கள் வளர்ச்சிப் பாதையில் இருக்கும்.தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

புதன்-
பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே போகும். முக்கிய சந்திப்புகள் தள்ளிப்போகும். அலைச்சல் அதிகரிக்கும்.

வியாழன் -
இடம் பூமி சம்பந்தப்பட்ட வியாபாரம் சிறப்பாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் ஏற்படும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் பதவி உயர்வு கிடைக்கும்.

வெள்ளி -
தர்ம காரிய சிந்தனைகள் ஏற்படும். ஆலய வழிபாடு செய்வீர்கள். நண்பர்களுக்கு உதவ வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

சனி-
தொழில் தொடர்பான முக்கியச் சந்திப்புகள் நடக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். கமிஷன் தொடர்பான தொழில் லாபகரமாக இருக்கும்.

ஞாயிறு -
எந்த விஷயத்திலும் பொறுமை காப்பது நல்லது. அவசர முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது தவிர்க்கவேண்டும். முக்கியமான சந்திப்புகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள்.

வணங்கவேண்டிய தெய்வம் -
விநாயகப் பெருமானுக்கு கொழுக்கட்டை நிவேதனம் செய்யுங்கள். நன்மைகள் பெருகும். தடைகள் அகலும்.
********************************************************

உத்திராடம் -
வெற்றிகள் குவியும் வாரம். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அலுவலகத்தில் திடீர் பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.தொழிலில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும் வெளிநாடுகளிலிருந்து முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். ஒப்பந்தங்களும் ஏற்படும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரம் தொடர்பான புதிய கிளைகளை ஆரம்பிப்பார்கள். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். வங்கியில் எதிர்பார்த்த தொழில் கடன் கிடைக்கும். பெண்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பார்கள். சுயதொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவார்கள். சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு. கலைநிகழ்ச்சிகள் நடத்த வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். வெளிநாடு சென்று கல்வி கற்கும் யோகமும் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
விரும்பிய விஷயங்கள் விரும்பியபடியே நடக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றியாகும். அதற்கான முயற்சிகளை இன்று எடுக்க சாதகமான பலன் கிடைக்கும். இடமாற்றத்திற்காக இன்று விண்ணப்பம் செய்யலாம் .

செவ்வாய் -
வியாபாரம் தொடர்பான பயணம் ஏற்படும். தொழில் ரீதியாக ஒரு முக்கிய நபரைச் சந்திப்பீர்கள். கமிஷன் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு சுபகாரிய விசேஷங்கள் பற்றிய விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

புதன் -
எதிர்பாராத நன்மைகள் அதிக அளவு ஏற்படும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டு. வியாபாரம் வளர்ச்சி அடையும். பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். பணவரவு இருமடங்காக இருக்கும்.

வியாழன் -
சுபகாரிய விஷயங்களுக்காக செலவுகள் ஏற்படும். அது தொடர்பான கடன் பெறும் முயற்சி வெற்றியாகும். அலைச்சல் அதிகரிக்கும்.

வெள்ளி -
சொந்த வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். சொத்து விற்பது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படும்.

சனி-
நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டியது வரும். தேவையற்ற பயணம் ஒன்று ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். உடலில் அசதி தோன்றும்.

ஞாயிறு -
தொழில் தொடர்பான சந்திப்புகள் சாதகமாக இருக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். சுபகாரியங்களுக்கான சில முன்னெடுப்புகள் இன்று எடுக்க வேண்டியது வரும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
திருமலை திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். மனநிறைவு உண்டாகும்.

**********************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x