இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எண்ணத்தைப் புரிந்து கொள்வீர்கள். திடீர் பயணம் உண்டாகும்.

ரிஷபம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம்: பிரபலங்களின் சந்திப்பு எதிர்பாராது நிகழும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். தாய்வழி உறவினர்களால் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும்.

கடகம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.

சிம்மம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதித்து விடுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி: பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில்கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த வழக்கு நல்ல விதத்தில் முடியும்.

துலாம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும்.

விருச்சிகம்: புதுப்புது யோசனைகள் தோன்றும். நவீன மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.

தனுசு: திடீர் செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து வரும் பணத்தால் சமாளிப்பீர்கள். பேச்சு திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்: தடைபட்ட வேலையை புதிய அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றுக்கு உங்களின் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர்வீர்கள். வெளி உணவு வேண்டாம்.

மீனம்: எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு பார்ப்பீர்கள். உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in