Published : 29 Dec 2019 11:07 AM
Last Updated : 29 Dec 2019 11:07 AM

2020 - நட்சத்திர பலன்கள் பூரட்டாதி நட்சத்திரத்துக்கான பலன்கள்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


பூரட்டாதி:


தீவிர உழைப்பும் அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே!

நீங்கள் குரு பகவானை நட்சத்திர நாயகனாகவும் முதல் 3 பாதங்களுக்கு சனி பகவானையும், 4ம் பாதத்திற்கு குரு பகவானையும் ராசிநாதனாகவும் கொண்டவர்கள்.


இந்த வருடம் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். அஷ்டமத்தி சனி இருப்பதால் சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.


தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.


குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளைக் கேட்பதைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.


பெண்களுக்கு : எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.


கலைத்துறையினருக்கு :தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தைக் குறைத்து தன்மையாகப் பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.


அரசியல் துறையினருக்கு : தேவையற்ற அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.


மாணவர்களுக்கு : கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.

பரிகாரம்: தக்ஷிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும்.


மதிப்பெண்கள் : உங்கள் நட்சத்திரத்திற்கு 69% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.


+: கவலைகள் அகலும்.


-: பிடிவாதத்தைத் தளர்த்த வேண்டும்.


**********************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x