

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அனுஷம்:
வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று லட்சியத்துடன் இருக்கும் அனுஷ நட்சத்திர அன்பர்களே!
நீங்கள் சனி பகவானை நட்சத்திர நாயகனாகவும், செவ்வாய் பகவானை ராசிநாதனாகவும் கொண்டவர்கள். நீங்கள் எதிலும் முதலாவதாக இருப்பீர்கள்.
இந்த வருடம் வேகத்தை விட்டு விவேகமாகச் செயல்படுவது வெற்றியைத் தரும். பணவரத்து எதிர்பார்த்ததைப் போல இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களைக் கூறும்போது அவர்கள் தவறாக அதைப் புரிந்து கொள்ளலாம்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். கணவன் மனைவியிடையே மனஸ்தாபங்கள் அகலும். எனவே கவனமாக எதையும் பேசுவது நல்லது.
பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். அக்கம்பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு : விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும்.
கலைத்துறையினருக்கு : எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும்.
அரசியல்துறையினருக்கு : நினைக்கும் காரியங்கள் தள்ளிப்போகலாம். வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். மேலிடத்திடம் நெருக்கம் அதிகரிக்கும். மனம் மகிழும் காரியங்கள் நடக்கும்.
மாணவர்களுக்கு : ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளையும் தாயாரையும் தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.
மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்திற்கு 75% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்
+: பயணங்கள் மூலம் வெற்றி
-: வெளி வட்டாரத் தொடர்புகளில் கவனம் தேவை
****************************************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |