2020 - புத்தாண்டு பலன்கள் ; விசாகம் நட்சத்திரத்துக்கான பலன்கள்! 

2020 - புத்தாண்டு பலன்கள் ; விசாகம் நட்சத்திரத்துக்கான பலன்கள்! 
Updated on
1 min read


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


விசாகம்:


எந்த ஒரு விஷயத்தையும் அது எப்படி நடக்கும் சாதகமா பாதகமா என்று முன்கூட்டியே யூகித்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ளும் திறமையுடைய விசாக நட்சத்திர அன்பர்களே!


நீங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மதிப்பளிப்பவர். நீங்கள் குரு பகவானை நட்சத்திர நாயகனாகவும், முதல் 3 பாதங்களுக்கு சுக்ர பகவானை ராசிநாதனாகவும், 4ம் பாதத்திற்கு செவ்வாய் பகவானை ராசிநாதனாகவும் கொண்டவர்கள்.


இந்த வருடம் வீண் செலவுகள் குறையும். எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும்.


தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. மேலிடத்துடன் கனிவை அனுசரிப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.


குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.


பெண்களுக்கு : அடுத்தவர்கள் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு ஏற்படலாம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.


கலைத்துறையினருக்கு : முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது நல்ல பலன் தரும். வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.


அரசியல்துறையினருக்கு : மேலிடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சு திறமை அதிகரிக்கும்.


மாணவர்களுக்கு : ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும்.

பரிகாரம்: திங்கள்கிழமையில் சிவபெருமானை வழிபடுவது காரியத் தடைகளை நீக்கும். மன அமைதியைத் தரும்.


மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்திற்கு 69% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.


+: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.


-: பணிகளை திட்டமிட்டு செய்வது நல்லது.


****************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in