இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: நீண்ட நாட்களாக தடைபட்டுவந்த காரியங்கள் இன்று சுமுகமாக முடியும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிப்பு உயரும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

ரிஷபம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ உத்தரவாதமோ தரவேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வழக்கு விவகாரங்களில் திருப்பம் உண்டாகும்.

கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

துலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு ஏற்பாடாகும்.

விருச்சிகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்த பேச்சு மனவருத்தத்தை தரும். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள்.

மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். திடீரென வருகை தந்து உறவினர்கள் ஆச்சரியப்படுத்துவார்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை விலகும். கலைப்பொருட்கள் சேரும்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

மீனம்: வீண் செலவுகளை தவிர்த்து விடுங்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in