2020 நட்சத்திரப் பலன்கள்; புனர்பூசத்துக்கு என்ன பலன்கள்?

2020 நட்சத்திரப் பலன்கள்; புனர்பூசத்துக்கு என்ன பலன்கள்?
Updated on
1 min read


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

புனர்பூசம்:


வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடவும் தயங்காத புனர்பூச நட்சத்திர அன்பர்களே!


நீங்கள் அனைவரையும் சரிசமமாக மதிப்பவர்கள். நீங்கள் குரு பகவானை நட்சத்திர நாயகனாகவும், முதல் 3 பாதங்களுக்கு புதன் பகவானை ராசிநாதனாகவும், 4ம் பாதத்திற்கு சந்திர பகவானை ராசிநாதனாகவும் கொண்டவர்கள்.


இந்த வருடம் வீண் அலைச்சல் இருந்தாலும் பணவரவு நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் இருந்து வந்த தாமதம் நீங்கும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.


தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்துப் பேசாமல் அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கசப்பு உணர்வு நீங்கும்.


குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான வசதிகளைப் பெருக்குவீர்கள்.


பெண்களுக்கு : எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.


கலைத்துறையினருக்கு : நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதைக் கழிப்பீர்கள். தொழில் சிறப்பான முன்னேற்றம் பெறும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.


அரசியல் துறையினருக்கு : சிறப்பாகப் பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சியும் ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.


மாணவர்களுக்கு : ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுத் தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.


பரிகாரம்: வியாழக்கிழமையில் விரதம் இருந்து நவக்கிரக குரு பகவானை வணங்கி சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.


மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்துக்கு 74% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்


+: திருமணத் தடை அகலும்


-: எடுக்கும் முடிவுகளுக்கு ஆலோசனைகள் அவசியம்
************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in